மோசடியாளர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராட்டம்

electrcity-Bord-L

எந்தவித வரப்பிரசாதங்கள் பெற்றுக்கொடுப்பதாக கூறினாலும், மின்சார சபையில் இடம்பெற்றுள்ள மோசடிக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் வரை தாம் மீண்டும் பணிக்கு திரும்ப போவதில்லை என மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க சம்மேளனம் தற்போது வரை பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (18) நள்ளிரவு தொடக்கம் தொழினுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் தமது தொழிற்சங்க போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

எவ்வாறாயினும் மின்சக்தி துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று, ஊழியர்களுக்கு சலுகை அடிப்படையில் கடந்த 14 ஆம் 15 ஆம் தினங்களை விடுமுறையாக கருதி வேதனத்தையும் வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

எனவே இன்றைய தினம் பணிகளுக்கு திரும்புமாறு கோரியிருந்தார்.

எனினும், தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரச்சினைக்கு தீர்வு காணாது பணிகளுக்கு திரும்பப் போவதில்லை என மின்சார சபை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment