தமிழ்­நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கைத் தமி­ழர்­க­ளுக்­கான குற்­றப்­பணம் இரத்து!

ekuruvi-aiya8-X3

இலங்­கையில் நடை­பெற்ற போர் கார­ண­மாக பல்­வேறு கால­கட்­டங்­களில் வட, கிழக்கைச் சேர்ந்த தமி­ழர்கள் தமிழ்­நாட்­டிற்கு புலம்­பெ­யர்ந்து சென்­றி­ருந்­தார்கள். அவ்­வாறு தமிழ்­நாட்டில் அக­தி­க­ளாக தஞ்­ச­ம­டைந்­த­வர்­களில் ஒரு பகு­தி­யினர் தமிழ்­நாடு அரசின் அதி­கா­ரத்­திற்­குட்­பட்ட மறு­வாழ்­வுத்­து­றையின் கட்­டுப்­பாட்டில் உள்ள முகாம்­களில் தங்­கி­வ­ரு­கின்­றார்கள்.

இவ்­வாறு 113 முகாம்­களில் 75ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட தமி­ழர்கள் வசித்­து­வரும் நிலையில் தமது சொந்தச் முயற்­சியில் வெளிப்­ப­திவு அக­தி­க­ளாக சுமார் 35 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்­ட­வர்கள் வசித்து வரு­கின்­றார்கள்.

அக­திகள் முகாமில் உள்ள தமி­ழர்­களில் தாயகம் திரும்ப விரும்­பு­ப­வர்­க­ளுக்கு மறு­வாழ்­வுத்­துறை மற்றும் யு.என்.எச்.சி.ஆர். இணைந்து அனைத்து வச­தி­க­ளையும் செய்­து­வரும் நிலையில், வெளிப்­ப­திவு அக­தி­க­ளாக வசித்து வரு­ப­வர்கள் தாயகம் திரும்பும் போது பெருந்­தொகை பணத்தை குற்­றப்­பண அற­வீட்டின் பெயரால் செலுத்தும் நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருந்­தார்கள்.

அகதி முகாம் பதிவில் இருப்­ப­வர்கள் யு.என்.எச்.சி.ஆர். மூலம் எது­வித குற்­றப்­பண அற­வீடும் இன்றி தாயகம் திரும்­பி­வரும் நிலையில் சுற்­றுலா விசாவில் சென்று தமது சொந்த முயற்­சியில் வெளிப்­ப­திவில் தங்­கி­யி­ருப்­ப­வர்கள் புதிய நடை­மு­றையால் கடந்த 2 ஆண்­டு­க­ளாக பெரும் சிக்­கல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

சுற்­றுலா விசாவில் வந்­த­வர்கள் விசா முடிந்து தங்­கி­யி­ருந்த காலத்­திற்கு குற்­றப்­பணம் கட்­ட­வேண்டும் என்ற நடை­மு­றையே கடந்த 2 ஆண்­டு­க­ளாக நடை­மு­றையில் உள்­ளது. இதன்­படி 10 ஆண்­டுகள் தமி­ழ­கத்தில் தங்­கி­யி­ருக்கும் ஒருவர் இந்­திய மதிப்பில் ஐம்­ப­தா­யி­ரத்­திற்கு மேல் குற்­றப்­பணம் கட்­ட­வேண்டும்.

இந்­திய மத்­திய அர­சினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட இப்­பு­திய திட்­டத்தால் பெரும்­பா­லா­ன­வர்கள் பாதிக்­கப்­பட்­டார்கள். இது குறித்து தாயகம் செல்­ல­வி­ரும்பும் மக்கள் அமைப்­பினைச் சேர்ந்­த­வர்கள் மத்­திய, மாநில அர­சு­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் பல­கட்ட பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தி­யதன் விளை­வாக இந்த பிரச்­சினை முடி­வுக்கு வந்­துள்­ளது.

இந்த நடை­முறை கடந்த சித்­திரை மாதமே அமு­லுக்கு வந்­தி­ருந்­தாலும் வெளிப்­ப­டை­யான அறி­விப்­புகள் எதுவும் சம்­பந்­தப்­பட்ட துறை­களின் சார்பில் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. இதனாம் மக்­க­ளிடம் பெரும் குழப்பம் நில­வி­வந்­தது. இந்த இடைப்­பட்ட காலத்தில் பலர் குற்­றப்­பண அற­வீட்டில் இருந்து விலக்­க­ளிக்­கு­மாறு விண்­ணப்­பித்­தி­ருந்த போதிலும் சிலர் தெளி­வான தக­வல்கள் இல்­லாத கார­ணத்தால் பெரும் தொகைப் பணத்தை செலுத்­தி­யுள்­ளார்கள்.

இந்­நி­லை­யில்தான், அக­திகள் மறு­வாழ்­வுத்­துறை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் சார்பில் அதன் பொறுப்­ப­தி­கா­ரியும் சென்னை யு.என்.எச்.சி.ஆர். அலு­வ­லகப் பிர­தி­நி­தியும் கலந்து கொண்ட நிகழ்வு திருச்சி கே.கே.நகரில் நடை­பெற்­றுள்­ளது.

திருச்சி கே.கே.நகர், கரு­மண்­டபம், சுப்­பி­ர­ம­ணிய புரம் ஆகிய பகு­தி­களில் வெளிப்­ப­திவு அக­தி­க­ளாக வசித்­து­வரும் இலங்கைத் தமி­ழர்­களை ஒன்­றி­ணைத்து கடந்த வியா­ழ­னன்று கலந்­தாய்வுக் கூட்டம் நடை­பெற்­றுள்­ளது.

சென்­னையில் இருந்து வருகை தந்­தி­ருந்த குறித்த அதி­கா­ரிகள் விசா முடி­வு­கால குற்­றப்­பண அற­வீட்டில் இருந்து விலக்­குப்­பெறும் வழி­மு­றைகள் குறித்து விளக்­க­ம­ளித்­தி­ருந்­தனர். முதல் முறை­யாக தமிழ்­நாடு அரசதரப்பில் இருந்து இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பினை இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.

சுயவிருப்பத்தின் பேரில் தாயகம் திரும்ப விரும்புவோரிற்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படும் என்றும் எக்காரணம் கொண்டும் கட்டாயப்படுத்தி யாரையும் திருப்பி அனுப்பும் நோக்கம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்கள்

Share This Post

Post Comment