ஜம்மு காஷ்மீரின் புதிய தலைமை தகவல் ஆணையராக குர்ஷீத் ஏ கனாய் இன்று பொறுப்பேற்பு

ekuruvi-aiya8-X3

JampK-gets-new-Chief-Information-Commissionerஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக குர்ஷீத் ஏ கனாய் இன்று பதவி ஏற்கிறார். அவருக்கு ஜம்மு காஷ்மீர் கவர்னர் என்.என்.வோஹ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதற்காக கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தி, துணை முதல்வர் நிர்மல் குமார் சிங் மற்றும் காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தலைவர் கவிந்தர் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான குர்ஷீத் ஏ கனாய் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். கனாய்-யை தலைமை தகவல் ஆணையராக தேர்வு செய்து ஜம்மு காஷ்மீர் கவர்னர் என்.என்.வோஹ்ரா உத்தரவிட்டார்.

இதற்கு முன்னதாக தலைமை தகவல் ஆணையராக செயல்பட்ட நசீர் அகமதுவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்தது. அதன்பின்னர் தலைமை தகவல் ஆணையரின் பதவி காலியாக இருந்த நிலையில், புதிய தகவல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ள கனாய் இன்று பொறுப்பேற்க உள்ளார்.

Share This Post

Post Comment