ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Thermo-Care-Heating

modi-meets2._L_styvpfஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் ஜி 20 மாநாடு நேற்று தொடங்கியது. இந்த நிலையில் 2-வது நாளான இன்று பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இத்தாலி பிரதமர் ஜென்டிலோனி, நார்வே பிரதமர் எர்னா சால்பர்க், தென்கொரிய பிரதமர் மூன் ஜே-இன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இந்தியாவுடனான நட்புறவு, எதிர்கால திட்டங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார சூழல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இத்தாலி மற்றும் நார்வேயுடன் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீடு குறித்து விவாதிக்கப்பட்டது.

தெரசா மேவிடம், பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு இங்கிலாந்துக்கு தப்பியவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Modi-meets- modi-meets3._

ideal-image

Share This Post

Post Comment