தலைசுற்று ஏற்பட்டு கீழே வீழ்ந்த முன்னாள் போராளி உயிரிழப்பு

Facebook Cover V02

sadதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்ததில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, நிலையில் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்து உள்ளார்.

பரந்தன் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சுரேந்திரன் விக்னேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் கடந்த 14 வருடங்களாக இருந்தார் என்றும் யுத்தத்தின் போது செல் வீச்சுக்கு இலக்காகி செல் பீஸ் தலைக்குள் இருந்ததாகவும் அதனால் தலை வலியால் அவதிப்பட்டு வந்த இவர், அடிக்கடி தலையை சுவரில் இடித்துக்கொள்வார் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் கடந்த 06ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தலைச்சுற்று காரணமாக,கீழே வீழ்ந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அந்நிலையில் நேற்றைய தினம் புதன் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், மரண விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் கையளித்தார்.

Share This Post

Post Comment