மாற்றுத் தலைமைக்கு விக்னேஸ்வரன் இணங்காவிட்டால் புதிய தலைமையை உருவாக்குவோம் – சுரேஸ்!

sureshமாற்றுத் தலைமையாகச் செயற்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணங்காவிட்டால் நாம் வேறு ஒரு தலைமையையோ அல்லது கூட்டுத் தலைவர்களையோ உருவாக்கக்கூடும் என ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்குப் பயணம் செய்த சுரேஸ் பிரேமச்சந்திரன் அங்கு பத்திரிகையாளர்களுக்கு நிகழ்கால அரசியல் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாற்றுத் தலைமை அவசியமில்லையெனவும், பிரச்சனைகள் இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசித் தீர்க்கலாம் எனத் தெரிவிக்கின்றார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வைத்த தேர்­தல் அறிக்­கை­யி­லி­ருந்து அத­னு­டைய தலைமை விலகி நடக்­கி­றது என்ற கருத்­தை­யும் முன்­வைத்­தி­ருந்­தார். வடக்கு- கிழக்கு இணைப்பு, கூட்­டாட்சி, தமிழ் மக்­க­ளுக்­கான சுயாட்சி என்­பன தேர்­தல் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள முக்­கிய விட­யங்­கள். தற்­போது இவை ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாத விட­ய­மா­கத் தமிழ் அர­சுக் கட்சி கைவிட்­டுள்­ளது. ஆனால் நான் அந்த விய­டங்­க­ளில் உறு­தி­யாக இருக்­கின்­றேன் என்­றும் முத­ல­மைச்­சர் கூறி­யுள்­ளார்.

வடக்கு மாகா­ண­ச­பை­யி­னால் தீர்­வுத் திட்­டம் வெளி­யி­டப்­பட்­டது. அந்­தத் தீர்­வுத் திட்­டத்­தின் அடிப்­ப­டை­யி­லும், ஏற்­க­னவே முன்­வைத்த தேர்­தல் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யி­லும் செயற்­ப­டு­வ­தா­னால் மாற்­றுத் தலைமை அவ­சி­யம்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தற்­போது மாற்­றுத் தலைமை தேவை­யில்லை எனக் கூறி­யது அவ­ரது சொந்­தக் கருத்து. ஆனா­லும், வடக்கு மாகாண சபை­யின் தீர்­வுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அவ­ருக்கு மாற்­றுத் தலைமை தேவை.

மாகாண சபை முத­ல­மைச்­ச­ரா­கத் தன்­னைக் கொண்டு வந்­த­தில் சம்­பந்­தன் மிகப்­பெ­ரிய பங்கு வகித்­துள்­ளார். ஆகவே நான் அவ­ருக்கு விரோ­த­மாக நடக்­கக் கூடாது என்று முத­ல­மைச்­சர் விக்­கி­னேஸ்­வ­ரன் நினைத்­தி­ருக்­க­லாம். இது சம்­பந்­தன் தொடர்­பான விட­ய­மல்ல. அர­சி­யல் தீர்வு சம்­பந்­தப்­பட்ட விட­யம். தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்வை எவ்­வாறு முன்­னெ­டுத்­துச் செல்­வது, எவ்­வாறு மேற்­கொள்­வது என்­பது தொடர்­பான விட­யம்.

தமிழ் மக்­க­ளுக்­குக் கொடுத்த வாக்­கு­று­தி­கள் சக­ல­தும் தமிழ் அர­சுக் கட்­சி­யால் கைவி­டப்­பட்­டுள்­ளன. எதிர்­கா­லத்­தில் எவ்­வா­றான அர­சி­யல் தேவை என்­பதை மக்­கள் தீர்­மா­னிப்­பார்­கள்.

வடக்கு மாகா­ண­சபை, தமிழ் மக்­கள் பேரவை இரண்­டி­ன­தும் தீர்­வுத் திட்­டம், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னது தேர்­தல் அறிக்கை, இவை மூன்­றி­லு­மி­ருந்து முற்று முழு­தாக வில­கிய தீர்­வுத் திட்­ட­தால் எந்­தப் பய­னும் இல்லை. இந்த மூன்று திட்­டங்­க­ளி­லு­மி­ருந்­தும் தமிழ் அர­சுக் கட்சி தடம் மாறிச் செல்­கி­றது என்­பது உண்மை – என்­றார்.


Related News

 • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர
 • மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்
 • இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்
 • புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்
 • விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி
 • துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்
 • இரண்டாவது நாளாகவும் CIDயில் ஆஜரான நாலக டி சில்வா
 • கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *