பிலிப்பைன்ஸ் தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் தொடர்புடைய குழு?

philippines-bomb-blastபிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு என்று அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான தவோ நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில், 14 பேர் உடல் சிதறி பலியாகினர், 67 பேர் படுகாயமடைந்தனர்.

அதிபர் ரோட்ரிகோவின் சொந்த நகரில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வெடிகுண்டு தாக்குதலை ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு தான் நடத்தியிருக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.

விசாரணையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இயங்கிவரும் அபு சயீஃப் தீவிரவாத குழு இந்த நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய தலைமை காவல் அதிகாரி கூறுகையில், வெடிகுண்டு தாக்குதலுக்கு தேவையானவை வீட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.






Related News

  • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
  • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
  • அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்
  • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
  • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
  • டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்
  • பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்றத்தில் ஆவேசம்
  • உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், பயனாளர்கள் அவதி
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *