ஜேர்மன் தாக்குதல்! இலங்கையர்களின் நிலை குறித்து விசாரணை

Thermo-Care-Heating

munich-attack-1-450x300ஜேர்மன் – முனிச் நகரத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பேற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதிலும் இலங்கையர்கள் தொடர்பில் இராஜதந்திர முறையின் கீழ் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்காக 3 ஆயுததாரிகள் வந்துள்ளதாக முதல் செய்தி வெளியாகிய போதிலும் தாக்குதலை ஒருவரே மேற்கொண்டுள்ளதாக முனிச் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆயுததாரி தன்னை தானே சுட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முனிச் நகர பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் சந்தேக நபர் 18 வயதுடைய ஜேர்மன் – ஈரானிய இரட்டை குடியுரிமையை கொண்டு முனிச் நகரில் வாழும் ஒருவராகும் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் தாக்குதலுக்கான காரணம் இன்னமும் தெளிவாக இல்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ideal-image

Share This Post

Post Comment