சிரியாவில் விமானத் தாக்குதல்

Facebook Cover V02

Syriaசிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள அலிப்போ மாகாணத்தில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 29 பேர் உடல் சிதறிப் பலியாகினர்.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் அலிப்போ மாகாணம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் இங்கு சிரிய அரசுப்படைகளும் போர் விமானங்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் இந்தப் பகுதியில் உள்ள அல்-அடாரெப் நகரில் ஒரு சந்தையைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வான்வழித் தாக்குதலில் 43 பொதுமக்கள் உயிரிழந்தனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்;பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை சிரியா அரசுப்படை நடத்தியதா அல்லது ரஷ்யப்படை நடத்தியதா என்பது பற்றித் தெரியவில்லை. இப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக்காகச் சமாதான வலையம் அமைப்பதற்கு ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளன. எனினும், இந்தத் தாக்குதலால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

Share This Post

Post Comment