நீர் தடாகத்தில் விழுந்த பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு

UKசீகிரிய பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் உள்ள நீரத் தடாகத்தில் விழுந்து பிரித்தானிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்த் தடாகத்தில் விழுந்திருந்த குறித்த நபரை கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்டபோது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

83 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Post

Post Comment