வித்தியாவின் தடையத்தை அழித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் – துவாரகேஸ்வரன்!

ekuruvi-aiya8-X3

punkuduthivu-vithyaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உட்பட ஐவரடங்கிய குழுவொன்று வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலிருந்து ஒருசில மீற்றர்களுக்கு அப்பாலுள்ள அனைத்துத் தடையங்களையும் அழித்தார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வித்தியாவின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வித்தியாவின் படுகொலை வழக்கை விசாரணை செய்த ஊர்காவற்றுறை நீதவான் விரக்தியுற்று அதனை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்தினார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்திய அன்றைய தினம் ரட்ணவேல், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் தவராசா அடங்கிய ஐவர் கொண்ட குழுவொன்று வித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து ஒருசில மீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள பிரதேசத்திலிருந்த தடையங்கள் அனைத்தையும் அழித்தனர்.

இதன்காரணமாகவே டி.என்.ஏ. பரிசோதனை பொருந்த முடியாத நிலை ஏற்பட்டதுடன், இரத்த மாதிரிகளும் ஒத்துப்போகவில்லையெனத் தெரிவித்தார். இதன் காரணமாகவே இவ்வழக்கு இரண்டரை வருடங்களாக இழுபட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment