சர்வதேச தடைகளின்போது, வட கொரியாவை தூக்கி நிறுத்திய நிழலுலகச் சந்தை

sdsd

_93968175_gettyimages-6327960442016 ஆண்டு வட கொரியா மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடைகளை அந்நாடு சமாளிப்பதற்கு, அங்கு வளர்ந்து வருகின்ற நிழலுலகச் சந்தை உதவியிருப்பதாக அந்த நாட்டின் பொருளாதாரம் மீதான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

சட்டப்பூர்வமற்றதாக இருந்தாலும் பரவலாக பொறுத்துகொள்ளக்கூடியதாக மாறியிருக்கும் அதிகாரபூர்வமற்ற சந்தையை கட்டுப்படுத்துவதற்கு, வட கொரியாவின் சர்வாதிகார தலைமைத்துவம் எவ்வித அறிகுறியையும் காட்டவில்லை என்று தென் கொரிய அரசுக்கு ஆலோசனை கூறுகின்ற வல்லுநர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு கண்டறிந்திருக்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிற அணு சோதனையை 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடத்தியதை தொடர்ந்து வட கொரியா மீதான ஐக்கிய நாடுகள் அவையின் தடைகள் இறுக்கமாயின.

_93968607_gettyimages-615769072

 

Share This Post

Post Comment