தடைகள் மீது ஏறிக் கூச்சலிடும் பிக்குவும் இனவாதிகளும், வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

ekuruvi-aiya8-X3

download-55பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட குழுவினரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செல்லவிடாது தடுத்தால் தாம் தீக்குளிக்கப் போவதாக மட்டக்களப்பு மாவட்ட சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரரை மட்டக்களப்புக்குள் நுழையவிடாது காவல்துறையினர் பொலநறுவை – வெலிக்கந்தை வீதியில் மறித்து வைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஞானசாரதேரரும் அவருடைய குழுவினரும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், மட்டக்களப்பு சிங்கள மக்கள் ஞானசார தேரரையும் அவரது குழுவினரையும் மட்டக்களப்புக்குள் வரவிடாது தடுத்தால் தாம் தீக்குளிக்கப்போவதாக எச்சரித்துள்ளனர்.

ஞனசாரதேரரையும் அவரது குழுவினரையும் மட்டக்களப்புக்குள் நுழையவிடாமல் காவல்துறையினர் தடுத்துள்ளமையால் ஆத்திரமடைந்த மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்ட சிங்கள இளைஞர்களைத் தூண்டிவிட்டு காவல்துறையினரால் போடப்பட்ட தடைகளில் ஏறியிருந்து கூச்சல் போட ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து பாதுகாப்பில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் சுமனரத்ன தேரரதும் சிங்கள இளைஞர்களின் இனவாதக் கருத்துக்களை வேடிக்கை பார்த்தவாறு நிற்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment