எந்தத் தடை வரினும் ஜெயலலிதாவைச் சந்திப்பேன் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்!

ekuruvi-aiya8-X3

vikneswaranதமிழ்நாட்டு முதலமைச்சரை சந்திப்பதற்கு முன்னரே எதிர்ப்புக்கள் உருவாகியுள்ளதாகவும், எத்தகைய தடைகள் வரினும் அதனைச் சமாளித்து தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவைச் சந்திப்பேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா மீண்டும் தெரிவானதற்கு வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதன்பின்னர் வடக்கு முதலமைச்சருக்கு நன்றிதெரிவித்து தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாக கடிதம் அனுப்பியிருந்ததுடன், அவருடன் சந்தித்துக் கலந்துரையாட விருப்பமும் தெரிவித்திருந்தார்.

இன்நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் கடந்த புதன் கிழமை ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில்,

பொருத்தமான தினம் நியமிக்கப்பட்டதன்பின்னர் ஜெயலலிதாவைச் சந்திக்கவிருப்பதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவைச் சந்திப்பதானால் டில்லியயின் அனுமதி பெறப்படவேண்டுமெனவும் இல்லாவிட்டால் அது சட்டவிரோதமான சந்திப்பு எனவும் செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் சிறிது நாட்கள் சென்றபின்னர் நேரம்வரும்போது ஜெயலலிதாவைச் சந்திப்பேன் என வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment