11 சிறுவர்கள் மீட்பு தாய்லாந்து குகையில் மீட்புப் பணி மொத்தமும் இன்றே நிறைவடையும் கடற்படை நம்பிக்கை

thailand_11தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும், கால்பந்து பயிற்சியாளர் ஆகியோரில் நான்கு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், மேலும் நேற்று 4 சிறுவர்களும் இன்று 3 சிறுவர்களும் என  மொத்தம் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு சிறுவனுக்கும் 2 நீர் மூழ்கி வீரர்கள்  வீதம் மீட்பு பணிகள் தொடர்கிறது.  மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மீட்கப்பட்ட 11 சிறுவர்களும் மருத்துவமனையில் குறிப்பிடத்தக்க உடல் நலத்துடன் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களில் சிலர் ‘மகிழ்ச்சி’ என்றும், குடும்பத்தைப் பிரிந்து வாடுவதாகவும் தெரிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஒரு சிலர் மட்டும் கண்ணாடி வழியாக குடும்பத்தினரை சந்தித்தனர்.
மீதமுள்ள 2 பேரை மீட்கும் பணி இன்று காலை உள்ளூர் நேரப்படி காலை 10.08 மணிக்கு தொடங்கியது.
19 நீர் மூழ்கி வீரர்கள் குகைக்குள் நுழைந்தனர். நிலைமை சாதகமாக இருந்தால், மீதமுள்ள சிறுவர்கள், அவர்களது கால்பந்து பயிற்சியாளர், அவர்களோடு தற்போது உள்ள ஒரு டாக்டர், கடற்படை முக்குளிக்கும் வீரர்கள்  இன்றே வெளியில் வருவார்கள்.
இன்றைய மீட்புப் பணி முந்தைய நாளைவிட நீண்ட நேரம் பிடிப்பதாக இருக்கும் என்றும், ஆனால், இன்றே மீட்புப் பணி மொத்தமும் நிறைவடையும் என்று நம்புவதாகவும் கடற்படை சீல்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Related News

  • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
  • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
  • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
  • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *