பட்ஜெட் விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 அறிமுகம்

ekuruvi-aiya8-X3

ASUS-Zenfone-Max-Pro-M1அசுஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாக் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட், மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பம்சங்கள்:
– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்
– அட்ரினோ 509 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி / 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி / 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.2
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்தியாவில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 டீப்சீ பிளாக் மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.10,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ.12,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே 3-ம் தேதி முதல் புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விறப்னை செய்யப்பட இருக்கிறது.
அறிமுக சலுகைகள்:
– ரூ.3200 மதிப்புடைய வோடபோன் சலுகை
– ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு 10 ஜிபி கூடுதல் டேட்டா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
– வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் ரூ.399 அல்லது அதற்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் போது 10 ஜிபி கூடுதல் டேட்டா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
– வோடபோன் ரெட் ரூ.499 அல்லது அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு வோடபோன் ரெட் ஷீல்ட் டிவைஸ் செக்யூரிட்டி திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
– பிளிப்கார்ட் மொபைல் ப்ரோடெக்ஷன் சலுகை ஸ்மார்ட்போனின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய ஒரு வருடத்திற்கு ரூ.49 என்ற விசேஷ கட்டணத்தில் பெற முடியும்.
– பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் அனைத்து கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோர் வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பெற முடியும்.
– பிளிப்கார்ட் சார்பில் ரூ.1000 வரை கூடுதல் எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது.

Share This Post

Post Comment