75 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ரெட்

ekuruvi-aiya8-X3

vodafone_redஇந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைத்து வருகின்றன. இதனால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் மலிவு விலையில் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஜியோவுடனான போட்டியை பலப்படுத்த வோடபோன் தனது போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றியமைத்து இருக்கிறது.

வோடபோன் ரெட் பேசிக் 399 சலுகை தற்சமயம் ரெட் என்டர்டெயின்மென்ட் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட சலுகையில் பயனர்களுக்கு 40 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, முன்னதாக இந்த திட்டத்தில் 20 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சலுகையில் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

வோடபோன் ரெட் டிராவலர் ரூ.499 திட்டம் தற்சமயம் ரெட் என்டர்டெயின்மென்ட் பிளஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிய திட்டத்தில் தற்சமயம் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 40 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேட்டாவுடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், அன்லிமிட்டெட் ரோமிங் மற்றும் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர், ஒரு வருட வோடபோன் பிளே சந்தா, ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.300 மதிப்புள்ள டிவைஸ் ப்ரோடெக்ஷன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Share This Post

Post Comment