யுவர் ஹவர் – ஸ்மார்ட்போனை கட்டுப்பாடுடன் பயன்படுத்த செயலி

‘காலம் கண் போன்றது, நேரம் பொன் போன்றது’ என்ற பழமொழியை எல்லாம் இன்றைய நவீன யுகத்தில் நாம் மறந்து வருகிறோம். எழுந்தவுடன் கண் விழிப்பதே செல்போனில் தான் என்றாகிவிட்டது. நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக போன் பார்ப்பதால் நம்மையும் அறியாமல் நாம் அதற்கு அடிமையாகிறோம்.

your-hourஇதனால் நமது வேலையும் பாதித்து, உடல் நலமும் கெடுகிறது. இதிலிருந்து நம்மை விடுவிக்கவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ‘யுவர் ஹவர்’ (your hour) ஆன்ட்ராய்டு செயலி (ஆப்). இந்த செயலியில் இருக்கும் அம்சங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவோரை அந்த பழக்கத்தில் இருந்து விடுபட உதவும்.

ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தததும், நாம் ஒரு நாளில் எத்தனை முறை ஸ்மார்ட்போனை அன்லாக் செய்திருக்கிறோம், எவ்வளவு நேரம் உபயோகித்து இருக்கிறோம் போன்ற தகவல்களை நமக்கு இந்த செயலி தெரியப்படுத்துகிறது. மேலும், ஒரு வாரத்திற்கு நாம் எவ்வளவு நேரம் போனில் நேரம் செலவிட்டு இருக்கிறோம் என்பதையும் கணக்கிட்டு காண்பிக்கிறது.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற மற்ற வலைத்தளங்களில் நாம் செலவிட்ட நேரத்தையும் துல்லியமாக சொல்லிவிடுகிறது. இத்துடன் அதற்கான வரைபடமும் (graph) போட்டு காண்பித்து விடும். இதை வைத்து நாம் போன் உபயோகிப்பதில் எந்த நிலையில் இருக்கிறோம் என்றும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த செயலி ஏங்குபவர், எப்போதாவது உபயோகிப்பவர், சார்ந்து இருப்பவர், போனை காதலிப்பவர், அதற்கு அடிமையானவர் என்ற ஐந்து வகைகளில் நாம் எந்த பிரிவில் இருக்கிறோம் என்பதை நமது பயன்பாட்டை வைத்து சொல்லிவிடும். ஏதாவது ஆப் பார்க்க ஆரம்பிக்கும் போது நாம் ஒரு டைமரும் (timer) வைத்துக் கொள்ளலாம். இதனால் அதிக நேரம் போனைப் பார்த்து காலத்தை விரயமாக்காமல் காப்பாற்றும்.


Related News

 • மொபைல்போன் உற்பத்தியில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கவும் வாய்ப்பு
 • யுவர் ஹவர் – ஸ்மார்ட்போனை கட்டுப்பாடுடன் பயன்படுத்த செயலி
 • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
 • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
 • 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் -ஆதார் ஆணையம் மறுப்பு
 • பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது
 • உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், பயனாளர்கள் அவதி
 • நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மை இல்லை என கூறும் மற்றொரு வீடியோ வெளியானது
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *