புதிய நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்

ekuruvi-aiya8-X3

Samsung-Galaxy-S9-Plusசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக கோரல் புளு, லிலாக் பர்ப்பிள் மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று நிறங்களில் வெளியிடப்பட்ட நிலையில் புதிய நிறம் இந்தியாவில் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் மொபைலில் இருந்து டிவியை இயக்கும் வசதியை ஸ்மார்ட்திங்ஸ் செயலியில் (SmartThings app) சேர்த்துள்ளது. டிவி கன்ட்ரோல் என அழைக்கப்படும் இந்த விட்ஜெட் முன்னதாக செயலியில் செயல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்கள் டிவியின் அருகில் சென்றால் ஸ்மார்ட்போனில் விட்ஜெட் தானாக தோன்றும். இந்த விட்ஜெட் பயனர்களை இருவித-ஸ்கிரீன் மற்றும் சவுன்ட் மிரரிங் செய்யும்.

டிவி கன்ட்ரோல் விட்ஜெட்-இல் வியூ ஸ்கிரீன் மோட் (View Screen mode) மூலம் பயனர்கள் தொலைகாட்சியை வீட்டில் எந்த அறையில் இருந்தும் பார்க்க முடியும். இதே போன்று கேம் மற்றும் ஸ்மார்ட்போன் தரவுகளை தொலைகாட்சிகளில் மிரர் செய்ய முடியும்.

இந்த டிவி கன்ட்ரோல் விட்ஜெட் பிளே சவுன்ட் ஆப்ஷன் வழங்குவதால், பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் மியூசிக்-ஐ தொலைகாட்சியில் இயக்கலாம். அந்த வகையில் இது ப்ளூடூத் ஸ்பீக்கர் போன்று பயன்படுத்த முடியும். டிவி டு டிவைஸ் (TV to Device) ஆப்ஷன் தொலைகாட்சியில் உள்ள ஆடியோவை மொபைல் சாதனங்களில் கேட்க வழி செய்யும்.

புதிய சன்ரைஸ் கோல்டு நிற கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் 128 ஜிபி வேரியன்ட்-இல் கிடைக்கிறது. இதன் விலை ரூ.68,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யப்படும் புதிய ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஜூன் 20-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு முறை ஸ்கிரீன் சரி செய்யும் வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு அல்லது பேடிஎம் மால் மூலம் பணம் செலுத்துவோருக்கு ரூ.9000 கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment