சாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது

Facebook Cover V02

Galaxy-Watch11சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் நியூ யார்க் நகரில் நடைபெற்ற அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 46எம்.எம். மற்றும் 42எம்.எம். ஆப்ஷன்களில் 1.3 இன்ச் மற்றும் 1.2 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் கேலக்ஸி வாட்ச் வட்ட வடிவ சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

டைசன்-சார்ந்த வியரபிள் பிளாட்ஃபார்ம் 4.0 மூலம் இயங்கும் கேலக்ஸி வாட்ச் 5ATM+IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட், மிலிட்டரி தர டியூரபிலிட்டி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்த வரை என்.எஃப்.சி. மற்றும் மாக்னெடிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாம்சங் பே மூலம் மொபைல் பேமென்ட் செய்ய முடியும். மேலும் பில்ட்-இன் ஸ்பீக்கர் இருப்பதால் வாய்ஸ் மெசிஜிங், மியூசிக் மற்றும் ஜி.பி.எஸ். போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பயனரின் மன அழுத்தத்தை டிராக் செய்யவும், மூச்சு பயிற்சி சார்ந்த பரிந்துரைகளை வழங்கும் புதிய டிராக்கர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட ஸ்லீப் டிராக்கர் உறக்கத்தை டிராக் செய்கிறது. இத்துடன் வீட்டிலேயே செய்யக்கூடிய 21 உடற்பயிற்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய வாட்ச்-இல் மொத்தம் 39 உடற்பயிற்சிகள் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் சிறப்பம்சங்கள்

– 1.2-இன்ச் / 1.3-இன்ச் 360×360 பிக்சல் வட்ட வடிவம் கொண்ட சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– 1.15 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் எக்சைனோஸ் 9110 பிராசஸர்
– 768 எம்பி (ப்ளூடூத்) / 1.5 ஜிபி ரேம் (எல்.டி.இ)
– 4 ஜிபி மெமரி
– டைசன் சார்ந்த வியரபிள் ஓ.எஸ். 4.0
– 5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL STD 810G
– 3ஜி/எல்.டி.இ. (ஆப்ஷன்), ப்ளூடூத் 4.2, வைபை, என்.எஃப்.சி., ஏ-ஜி.பி.எஸ்.
– 472 எம்.ஏ.ஹெச். (46 எம்.எம்.) / 270 எம்.ஏ.ஹெச். (42 எம்.எம்.) பேட்டரி
– வயர்லெஸ் சார்ஜிங் வசதி

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 43 எம்.எம். வெர்ஷன் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 349.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,070) என்றும், 42 எம்.எம். மிட்நைட் பிளாக் மற்றும் ரோஸ் கோல்டு வெர்ஷன்கள் விலை 329.99 டாலர்கள் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.22,695) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி வாட்ச் விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்குகிறது. கேலக்ஸி வாட்ச் எல்.டி.இ. வெர்ஷன் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை.

Share This Post

Post Comment