கேரள வெள்ள பாதிப்பில் பாழடைந்த சாதனங்களை சரி செய்ய அசுஸ் சிறப்பு ஏற்பாடு

asusகேரளாவில் வரலாறு காணாத பலத்த மழை, அம்மாநிலத்தில் பெருமளவு பொருட்சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்களான சியோமி, ஹானர் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மீட்பு பணிகளில் உதவ முன்வந்திருக்கின்றன். இந்த நிறுவனங்கள் தண்ணீரில் பாழாகி போன ஸ்மார்ட்போன்களை குறைந்த கட்டணம் அல்லது இலவசமாக சரி செய்து வழங்குவதாக தெரிவித்தன.
அந்த வகையில் அசுஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி தண்ணீரில் பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை கூலி இல்லாமல் சரிசெய்து வழங்குவதாக அறிவிவித்துள்ளது. அசுஸ் சார்பில் மாநிலம் முழுக்க சர்வீஸ் முகாம்கள் அமைக்கப்படுகிறது. இவை அசுஸ் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் நிறுவப்படுகின்றன.
தண்ணீரில் பாதிக்கப்பட்ட சாதனங்களை சரி செய்வதற்கான கூலி வாங்காமல் இலவசமாகவும், வாரண்டியில் உள்ள சாதனங்களின் உதிரிபாகங்களுக்கு 50% தள்ளுபடி அறிவித்துள்ளது. வழக்கமான கோளாறுகளை சரி செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்காது. எனினும் பாகங்களை மாற்றுவதற்கு பாதி கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.
உதிரிபாகங்களுக்கான 50% தள்ளுபடி வாரண்டியில் உள்ள சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் வாரண்டியில் இல்லாத சாதனங்களை சரி செய்யும் போது உதிரிபாகங்களுக்கான முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். அசுஸ் சிறப்பு சர்வீஸ் முகாம்கள் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Related News

 • மொபைல்போன் உற்பத்தியில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கவும் வாய்ப்பு
 • யுவர் ஹவர் – ஸ்மார்ட்போனை கட்டுப்பாடுடன் பயன்படுத்த செயலி
 • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
 • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
 • 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் -ஆதார் ஆணையம் மறுப்பு
 • பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது
 • உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், பயனாளர்கள் அவதி
 • நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மை இல்லை என கூறும் மற்றொரு வீடியோ வெளியானது
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *