உலக நாடுகளுக்கு இணையாக 5ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டம்

ekuruvi-aiya8-X3

5g_bsnlஉலகின் மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் அதிவேக 5ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளில் பி.எஸ்.என்.எல். ஈடுபட்டுள்ளது.
இதற்கென நோக்கியா, இசட்.டி.இ மற்றும் கொரியன்ட் போன்ற நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல். இணைகிறது. 2020-ம் ஆண்டு வாக்கில் 5ஜி சேவைகளை துவங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் 5ஜி வெளியாகும் போதே இந்தியாவிலும் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவைகள் வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைமை பொது மேலாளர் அனில் ஜெயின் தெரிவித்தார்.
முன்னதாக பி.எஸ்.என்.எல். போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு தபால் முலம் கட்டணத்திற்கான பில்கள் அனுப்பப்படுகிறது. சென்னையில் 5.5 லட்சம் தரைவழி டெலிபோன்களும், 3.5 லட்சம் போஸ்ட்பெய்டு மொபைல் போன் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் மாத கட்டண விவரத்தை தபால் வழியாக அனுப்புவதை பி.எஸ்.என்.எல். நிறுத்த முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக வாடிக்கையாளர்களின் ‘பில்’ விபரத்தை இ.மெயில் வழியாக, இ-பில்லாக அனுப்ப திட்டமிட்டு ‘கோ கிரீன்’ என்ற புதிய முறையை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது.
இது பற்றி பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் விஜயா கூறியதாவது:-
இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ‘‘கோகிரீன்’’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பேப்பர் பில்லுக்கு பதிலாக வாடிக்கையாளர்களின் இ-மெயில் முகவரிக்கு ‘பில்’ அனுப்பப்படும்.
அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தை பின்பற்றுவோருக்கு ‘பில்’ தொகையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்படும். இதுவரையில் 40 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் விரும்பினால் மட்டுமே இ.பில் வழங்கப்படும். இல்லையெனில் தபால் மூலமே வழக்கம் போல் வினியோகிக்கப்படும். போஸ்ட்பெய்டு பில் தாரர்களுக்கு எம்.எம்.எஸ். மூலமாக பில் தொகை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக வாடிக்கையாளர்கள் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறோம்.
செலவை குறைப்பதற்காக இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இது செயல்படுத்தப்படுகிறது என்றார்.

Share This Post

Post Comment