குறைந்த விலையில் Freedom LED தொலைக்காட்சி

Thermo-Care-Heating

freedom_TVRinging Bells நிறுவனத்தின் குறைந்த விலை LED தொலைக்காட்சி, இன்று சுதந்திர தினத்தன்று அறிமுகமாகவுள்ளது.

இந்தியாவின் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், இந்த வருடத்தின் தொடக்கத்தில் ரூ.251 விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து சர்ச்சையைக் கிளப்பியது.

உலகின் மிகக்குறைந்த விலை ஸ்மார்ட்போன் என்று கருதப்படும் Freedom ஸ்மார்ட்போனை ஆன்லைன் மூலமாக கோடிக்கணக்கானோர் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். ஆனால் டெலிவரி செய்ய தாமதமானதால் பல்வேறு புகார்கள் கூறப்பட்டதோடு அரசியல் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.

பின்னர், Cash On Delivery வழியாக இந்த ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக அறிவித்த இந்நிறுவனம் தனது டெலிவரியைத் தொடங்கியதோடு, இதுவரை சுமார் 65,000 ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறைந்த விலை LED தொலைக்காட்சி தயாரித்துள்ள இந்நிறுவனம் இதை இன்று ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இதன் விற்பனை, நாளை (ஆகஸ்ட் 16) தொடங்குகிறது. 31.5 inch அளவு கொண்ட இந்த HD LED தொலைக்காட்சியின் விலை ரூ.9,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி Freedom டிவியின் விற்பனைக்குக்கான முன்பதிவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ideal-image

Share This Post

Post Comment