ரூ.7,900 செலுத்தினால் கேலக்ஸி நோட் 9 பெறலாம்

Facebook Cover V02
Samsung-Galaxy-Note-9சாம்சங் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 9 வாங்குவோரை கவரும் வகையில் ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி கேலக்ஸி நோட் 9 வாங்க விரும்புவோர் ஏர்டெல் தளத்தில் ரூ.7,900 செலுத்தி புத்தம் புதிய நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை பெறலாம். பின் மீதித் தொகையை மாதம் ரூ.2,999 என 24 மாதங்களுக்கு செலுத்தலாம். இதன் மூலம் இரண்டு ஆண்டுக்கான மொத்த தவணை மற்றும் ஏர்டெல் திட்டதிற்கான கட்டணம் ரூ.79,876 ஆகும்.
இத்துடன் மாத தவணை முறையுடன் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதன் பில்ட்-இன் திட்டத்தில் பயனர்களுக்கு மாதம் 100 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் டிவி மற்றும் வின்க் மியூசிக் சேவைகளுக்கு இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
தற்சமயம் பயனர்கள் தங்களுக்கான நோட் 9 ஸ்மார்ட்போனினை ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்வோருக்கு ரூ.4,999 விலையில் கியர்ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாம்சங் வலைதளத்தில் வழங்கப்படுகிறது. புதிய நோட் 9 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்டு 22-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

Share This Post

Post Comment