ரிலைன்ஸ் ஜியோபோன் 2 நான்காவது ஃபிளாஷ் விற்பனை எப்போது?

ekuruvi-aiya8-X3

Jio-Phone-2-Fourth-Flashரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதுவரை மூன்று ஃபிளாஷ் விற்பனை நிறைவுற்று இருக்கிறது. அந்த வகையில் ஜியோபோன் 2 நான்காவது ஃபிளாஷ் விற்பனை செப்டம்பர் 12-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் ஜியோபோன் 2 ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் அதற்கான சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோபோன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது.
ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:
– 2.4 இன்ச்,320×240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
– டூயல் கோர் பிராசஸர்
– 512 எம்பி ரேம்
– 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 2 எம்பி பிரைமரி கேமரா
– 0.3 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
– 2000 எம்ஏஹெச் பேட்டரி
இந்தியாவில் புதிய ஜியோபோன் 2 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜியோ சார்பில் மான்சூன் ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக டெய்ரி மில்க் சாக்லேட் வாங்குவோருக்கு இலவசமாக 1 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் டெய்ரி மில்க் சாக்லேட் கவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து இலவசமாக 1 ஜிபி டேட்டா பெற முடியும்.

Share This Post

Post Comment