மோட்டோ ஜி6 பிளஸ் விரைவில் இந்தியாவில்…

ekuruvi-aiya8-X3

Moto-G6-Plusமோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக டீசர்கள் வெளியிடப்பட்ட நிலையில், ஒருவழியாக மோட்டோ ஜி6 பிளஸ் வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவோவின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் செப்டம்பர் 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக மோட்டோ ஜி6 மற்றும் ஜி6 பிளே மாடல்கள் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள ஜிஃப் மோட்டோ ஜி6 பிளஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் சில சிறப்பம்சங்களை தெரியப்படுத்தி உள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்மார்ட் பிரைமரி கேமராக்கள், குறைந்த வெளிச்சத்தில் சிறப்பான புகைப்படம் எடுக்கும் வசதி, 6 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது.
இத்துடன் கூகுள் லென்ஸ், ஸ்பாட் கலர், போர்டிரெயிட் மோட், செலக்டிவ் பிளாக் மற்றும் வைட், லேன்ட்மார்க் அங்கீகாரம், ஃபேஸ் அன்லாக், 18:9 மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, டர்போ பவர் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மோட்டோ ஜி6 பிளஸ் சிறப்பம்சங்கள்:
– 5.93 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 IPS டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 14nm பிராசஸர்
– அட்ரினோ 508 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் ஆட்டோஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம், f/1.7, 1.4um பிக்சல்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜிங்

Share This Post

Post Comment