ரூ.35 விலையில் ஏர்டெல் காம்போ சலுகை

airtel_0409ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய சலுகையில் டேட்டா, டாக்டைம், மற்றும் வேலிடிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டு, அதிக ஆய்வுக்குப் பின் புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சலுகைகளில் பயனர்கள் டாக்டைம், டேட்டா உள்ளிட்டவை ஒரே சலுகையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வெவ்வேறு முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. டாக்டைம் உடன் வெவ்வேறு வேலிடிட்டி வழங்கும் சலுகைகளின் விலை ரூ.35, ரூ.65 மற்றும் ரூ.95 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.35 விலையில் கிடைக்கும் ஏர்டெல் சலுகையில் பயனர்களுக்கு ரூ.26.66 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா, 100 எம்.பி. டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இதேபோன்று ரூ.65 விலையில் கிடைக்கும் சலுகையில் ரூ.65 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா, 200 எம்.பி. டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.95 சலுகையில் ரூ.95 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசா, 500 எம்.பி. டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக தமிழ் நாடு, பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு பகுதிகளில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய சலுகைகள் விரைவில் நாடு முழுக்க அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் ஏர்டெல் அறிவித்த ரூ.449 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா என 70 நாட்களுக்கு மொத்தம் 140 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.





Related News

  • மொபைல்போன் உற்பத்தியில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கவும் வாய்ப்பு
  • யுவர் ஹவர் – ஸ்மார்ட்போனை கட்டுப்பாடுடன் பயன்படுத்த செயலி
  • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
  • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
  • 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் -ஆதார் ஆணையம் மறுப்பு
  • பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது
  • உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், பயனாளர்கள் அவதி
  • நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மை இல்லை என கூறும் மற்றொரு வீடியோ வெளியானது
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *