வதந்திகளை தடுக்க நடவடிக்கை – வாட்ஸ்ஆப் உறுதி

ekuruvi-aiya8-X3

whatsappபொய் தகவல்கள் மற்றும் வெறுப்பு உணர்வை துாண்டும் வகையிலான விஷயங்களை பரப்புவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கும்படி, பிரபல சமூக ஊடகமான, ‘வாட்ஸ் ஆப்’பை, மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இதற்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் இன்று பதிலளித்துள்ளது. அதில், வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தவறான தகவல்கள், வதந்திகளை தடுப்பது சவாலான பணியாக உள்ளது.

தவறான மற்றும் ஆபத்தான தகவல்களை பரப்ப எங்களின் சேவை பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இருப்பினும் மக்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் மட்டுமே இத்தகைய தவறுகளை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment