ஐபால் ஆசான் 4 மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம்

iball-mobileஐபால் நிறுவனம் தனது ஆசான் சீரிஸ் புதிய மொபைல்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆசான் 4 என அழைக்கப்படும் புதிய மொபைல் போன் பெரிய திரை கொண்டிருப்பதால் முதியோருக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும் என ஐபால் தெரிவித்துள்ளது.
பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி மற்றும் டாக்கிங் கீபேட் உள்ளிட்டவை புதிய மொபைல் போனில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மொபைல் வைத்திருப்போர் தவிர மற்றவர்கள் இதில் தங்களது சிம் கார்டை செருகினால் ஏற்கனவே மொபைலில் செட் செய்யப்பட்டு இருக்கும் மொபைலுக்கு எச்சரிக்கை செய்யும்.
ஐபால் ஆசான் 4 அம்சங்கள்:
– 2.31 இன்ச் டிஸ்ப்ளே
– பெரிய பட்டன் கொண் கீபேட்
– பிரெய்லி மற்றும் டாக்கிங் (பேசும்) கீபேட்
– எஸ்.ஓ.எஸ். அம்சம்
– டூயல் சிம் ஸ்லாட்
– மைக்ரோ எஸ்டி மூலம் 32 ஜிபி வரை மெமரி
– எஃப்.எம். ரேடியோ
– 1800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள நினைவூட்டும் படி மெடிசின் ரிமைன்டர் வசதி சிறப்பான ஆடியோ தரம் இருப்பதால் காது கேட்பதில் சிறு கோளாறு இருப்பவர்களுக்கும் தெளிவாக கேட்க செய்யும் வகையில் ஹியரிங் ஏய்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பத்து இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் ஆசான் 4 மொபைல் போன் இந்தியாவில் ரூ.3,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

 • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
 • 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் -ஆதார் ஆணையம் மறுப்பு
 • பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது
 • உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், பயனாளர்கள் அவதி
 • நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மை இல்லை என கூறும் மற்றொரு வீடியோ வெளியானது
 • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – கைவிட்டது ரஷ்யா
 • பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் கூகுள் பிளஸ் நிறுத்தப்படுகிறது
 • போலி செய்திகளை எங்களுடைய தளத்தில் அனுமதிக்க மாட்டோம் தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக், டுவிட்டர் உறுதி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *