தமிழர்கள் சுயாதீனமாக வாக்களிக்க அனுமதியுங்கள். – பற்றிக் பிரவுன் – பகுதி 2- ரதன்

ekuruvi-aiya8-X3

ஜனவரி 24 – பற்றிக் பிரவுனுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன
ஜனவரி 24 – அதிகாலை – பற்றிக் பிரவுன், ஒன்ராரியோ கொன்சவேற்றிவ் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார்
பெப்ரவரி 15 – தனது இராஜினமா, தனது அனுமதியற்று அனுப்பப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்
பெப்ரவரி 16 – ஒன்ராரியோ மாநில அவையில், பற்றிக் பிரவுன் கொன்சவேற்றிவ் கட்சி சார்பாக அமர்வுகளில் கலந்து கொள்ளமுடியாது என இடைக்காலத் தலைவர் அறிவித்தார்.
பெப்ரவரி 16 – ஒன்ராரியோ கொன்சவேற்றிவ் கட்சியின் புதிய தலைவர் தேர்வுக்கான வேட்பு மனுவை, பற்றிக் பிரவுன் கட்சித் தலைமையகத்தில் கையளித்தார்
பெப்ரவரி 26 – ஒன்ராரியோ கொன்சவேற்றிவ் கட்சியின் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

partic-tamil‘Get me the result I want’ – ஹமில்ற்றன் பகுதி தொகுதி (Hamilton West –Ancaster – Dundas) ஒன்றில், பற்றிக் பிரவுன், தான் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக , கொன்சவேற்றிவ் கட்சியின் நிறைவேற்று இயக்குனர் பொப் ஸ்ரான்லிக்கு தொலைபேசியூடாக அனுப்பப்பட்ட செய்தியே“Get me the result I want” ஆகும். இதனை ரொரன்ரோ ஸ்ரார் பத்திரிகை பெப்ரவரி 26ந் திகதி, பற்றிக் இராஜினாமாச் செய்வதற்கு சில மணி நேரங்கள் முன்பாக வெளியிட்டிருந்தது. இதற்கு முன்பாக பற்றிக் பிரவுன் பற்றிய பல விடயங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. Randy Hillier , ஒன்ராரியோ மாநில ஒழுக்கம்-வழுவாமை (நேர்மை) ஆணையரிடம், பற்றிக் பிரவுனின் வருமானம், அதனை மீறிய சொத்து சேர்த்தல் போன்றவற்றைப் பற்றி புகார் கொடுத்திருந்தார். இவர் ஒன்ராரியோ கொன்சவேற்றிவ் கட்சியின் மாநில அவை உறுப்பினர்.
பற்றிக் பிரவுனின் காலத்தில் நடைபெற்ற ஸ்காபரோ மத்தி மற்றும் ஒட்டாவா நிப்பன் (Ottawa West-Nepean) கட்சி மாநில அவைக்கு போட்டியிடுபவரைச் தேர்வு செய்வதற்கான தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன எனக் கூறி, புதிய இடைக்காலத் தலைவர் இவ்விரு தொகுதிகளிலும் மீளத் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
ford_brown.jpg.size.custom.crop.1086x724கட்சியில் சேர்க்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை என அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை தவறானது எனவும் இடைக்காலத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
2015ல் பற்றிக் பிரவுன் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சில காலங்களில், பற்றிக் பிரவுனின் முன்னால் நடவடிக்கைகளை பிரத்தியேக ஆய்வாளர்கள், பற்றிக் பிரவுன் வாழ்ந்த பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். பற்றிக் பற்றிய பல தகவல்கள் இவர்களால் சேகரிக்கப்பட்டிருந்தன. ஏன்?

((The sources say that just a couple of months after Mr. Brown won the leadership in May of 2015, for instance, the advisers learned an Ontario media outlet was digging into his associations with women in his hometown of Barrie. Reporters interviewed bar servers, door men, and women he may have dated, but the investigation produced no stories. Around that time, a group of Mr. Brown’s advisers held their first strategy session on how they would handle any allegations of sexual misconduct against their boss. ) (by Gary Mason – Globe and Mail 2018-03-03))
பற்றிக் பிரவுனின் வெளியேறியமைக்கு உட்கட்சியில் ஆதரவமின்மை என்பது அவரது ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும் விமர்சனம். அவர் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டார் என்ற குற்றச்சாட்டும் அவர்களால் முன்வைக்கப்படுகின்றது. பற்றிக் இரண்டாவது தடவையாக தனது வெளியேற்றத்தை அறிவித்த போது, எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்க வேண்டும். களங்கமான பெயருடன், ஒன்ராரியோ முதல்வர் கதலின் வின்னுடன் போட்டியிட முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். இவர் தனது வேட்பு மனுவை தாக்குதல் செய்த போது, இந்த விடயத்தை இவர் கவனத்திற் கொள்ளவில்லையா? பற்றிக் பிரவுனைப் பற்றி பல புதிய விடயங்களை, ஊடகங்களும், உட்கட்சியினரும் தெரிந்துவைத்திருந்தார்கள். இது பற்றிக் பிரவுனுக்கும் தெரியும். அவை பொது வெளிக்கு வருவதினை அவர் விரும்பவில்லை. அத்துடன் அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மிக முக்கியமானவை. இவை அனைத்தும் இணைந்தே அவரது இரண்;டாவது வெளியேற்றம் அமைந்துள்ளது. அவரைப் பற்றி பல விடயங்கள் உலாவுகின்றன. அவை ஊர்ஜிதப்படுத்தப்படாதவை என்பதனால் இங்கு முன்வைக்கமுடியாதுள்ளது. Pure Politicians என்ற சொல், மேற்குலகில் அதிகமாக பாவிக்கப்படுகின்றது. இது தூய்மையை மட்டும் குறிப்பதல்ல. அரசியல்வாதி ஒரு வியாபாரியாக இருப்பதையும், ஒரு வியாபாரி, அரசியல்வாதியாக மாறுவதையும் விமர்சிக்கின்றது. இவ்வாறானவர்களைPure Business men/ women என அழைக்கப்படுவார்கள். பற்றிக் பிரவுனைப் பொறுத்தவரை அவர் இரண்டாவது ரகம். தனது சுய நலனையே முன்னிறுத்தினார்.
பற்றிக் பிரவுன், அரசியலுனுள் நுழைய விரும்புபவர்களுக்கு ஒரு படிப்பினையாகவுள்ளார். இவரினூடாக பல விடயங்களை கற்கலாம் குறிப்பாக ஊடகங்கள், அரசியல்வாதிகளை உன்னிப்பாக கவனிக்கின்றனர். அதே சமயம் உங்கள் முன்னால் தவறுகள் அல்லது ஓழுக்க மீறல்கள், உங்கள் அரசியல் வாழ்வை பாதிக்கும் என்பதற்கும் பற்றிக் ஒரு எடுத்துக்காட்டு.
Arend Lijphart என்ற அரசியல் விஞ்ஞானி, அரசியல் கலாச்சாரத்தின் கூறுகளை ஆய்வு செய்துள்ளார். அவற்றினுள் முக்கியமான இரண்டு மக்கள் திரள் கலாச்சாரம், உயர்ந்தவர்கள் (Elite) கலாச்சாரம். கனடா போன்ற மேற்கு நாடுகளில் இரண்டாவது வகை அரசியல் கலாச்சாரமே ஆதிக்;கம் செலுத்துகின்றது. உயர்ந்தவர்கள் (Elite) அரசியல் கலாச்சாரம்- உயர்ந்தவர்கனின் (Elite) ) கோட்பாடுகள், மதீப்பீடுகள், பண்புகள், விழுமியங்கள், ஒழுக்க விதிகள், மரபு போன்றவற்றை உள்ளடிக்கியுள்ளன. இவற்றுள் எதனை பற்றிக் பிரவுன் கொண்டிருந்தார்?
ekuruvi_night-2018பற்றிக்கினைப் பின்பற்றிய தமிழர்களும், பற்றிக்கினைப் பின்பற்றினார்கள். பற்றிக் இராஜினாமா செய்தவுடன், மற்றொரு வேட்பாளரை ஆதரித்தார்கள். பற்றிக் மீள போட்டியிட அறிவித்த போது, பற்றிக் பிரவுனின் பின்னால் சென்றார்கள். அவர் வெளியேறியபோது, மீண்டும் வேறொரு வேட்பாளர் பின்னால் சென்றுள்ளார்கள். இதற்கிடையில் இவர்களில் ஒரு பகுதியினர் டக் போர்ட்டை ஆதரிக்கின்றார்கள். மார்ச் 25, 2018ல் வெளியான குளோப் அன்ட் மெயில் பத்திரிகையில் டக் போர்ட் பற்றிய மிகவும் காத்திரமான கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விடயங்கள்

  • Doug Ford, Toronto Mayor Rob Ford’s brother, sold hashish for several years in the 1980s.
  • Another brother, Randy, was also involved in the drug trade and was once charged in relation to a drug-related kidnapping.
  • Their sister, Kathy, has been the victim of drug-related gun violence.

(https://www.theglobeandmail.com/news/toronto/globe-investigation-the-ford-familys-history-with-drug-dealing/article12153014/)
இக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது, டக் போர்ட் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாக தெரிகின்றது. அவர் கொன்சவேற்றிவ் கட்சித் தலைவரானால், மீண்டும் ரொப் போர்ட் போன்று டக் போர்ட் மீது ஒரு ஊடகப் போர் நடைபெறும். கொன்சவேற்றிவ் கட்சித் தலைமை பற்றிக் பிரவுன், டக் போர்ட் போன்ற வேட்பாளர்களை போட்டியிட ஏன் அனுமதிக்கின்றது? கொன்சவேற்றிவ் கட்சித் தலைமையின் நிர்வாக சீரின்மை அவர்களது கட்சியின் முன்னேற்றத்தை தடுக்கின்றது. மக்களுக்கும் கட்சி மீதான நம்பிக்கையை குறைக்கின்றது. உதாரணத்துக்கு பற்றிக் பிரவுன், ஒன்ராரியோ மாநில அவையில், சுயாதீன அங்கத்தவராக அமரவேண்டும். கொன்சவேற்றிவ் கட்சியை பிரதிநிதித்துவ முடியாது. ஆனால் கட்சித் தலைவராக போட்டியிட, அதே கட்சித் தலைமை அனுமதித்துள்ளது. இது மக்களை முட்டாளாக்கும் வேலையா?
சாதாரண ஒன்ராரியோ வாசி ஒருவர், நாளாந்தம் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றார். மருத்துவம், மருந்து, போக்குவரத்து, காப்புறுதி, அதிகரித்துச் செல்லும் எரிபொருட்கள் விலை, காய்கறி விலைகள், அதிகரிக்கும் இளைஞர் வேலையின்மை, அதிகரித்துச் செல்லும் முதியோர் எண்ணிக்கைக்கு குறைக்கப்படும் முதியோர் பராமரிப்புச் சேவைகள், கல்வி, கவனிக்கப்படாமல் குறைக்கப்படும் முதன் குடிகள், கல்வி, நிதிப் பற்றாக்குறை, வீதிகள் பராமரிப்பு, சாதாரண மனிதனால் நினைத்துக் கூட பார்க்க முடியாத வீட்டின் விலை ஏற்றம் என பெரும் பட்டியலிடலாம். இவற்றிக்கான தீர்வை எக் கட்சிகள் முன்வைக்கப் போகின்றார்கள்? இக் கேள்விகள் எம் முன்னே இருக்கும் பொழுது, தமிழனாகிய என் முன்னால் மற்றொரு விடயம் முன்வைக்கப்படுகின்றது. தமிழ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். பற்றிக் பிரவுனுக்கான ஆதரவு, அவர் தமிழர்களுக்கு ஆதரவளித்தார் என்பதனால் தமிழர்கள் அவரை ஆதரவளிக்க வேண்டும்.
பிறையன் மல்றோனி பிரதமராக இருந்த பொழுது. ஐரோப்பாவிலிருந்து அகதிகளாக கப்பலில் நியு பவுண்லாந்தை வந்தடைந்த தமிழர்களை ஏற்றுக் கொண்டார். அதற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். (அதனால் அவரது மகள் கரோலினுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.) மல்றோனியின் இடத்தில் , வேறு கட்சிப் பிரதமர் இருந்திருந்தால், அவர் தமிழர்களை மீள அனுபியிருப்பாரா? மல்றோனியின் கொன்சவேற்றிவ் கட்சி ஆட்சியில் (ஹாப்பர் அரசு), பிரிட்டிஸ் கொலம்பியாவை வந்தடைந்த கப்பலில் வந்தோருக்கு என்ன நடைபெற்றது என்பதனை நாமறிவோம்.
2011 பொதுத் தேர்தலில் ராதிகா சிற்சபேசன் என்.டி.பிக் கட்சியின் சார்பாக ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதியில் போட்டியிட்ட போது, அவர் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டது. அவருக்கு 40 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அதற்கு முன்பாக என்.டி.பிக் கட்சி அதிகமாக பெற்ற வாக்கு வீதம் 14 ஆகும் (2008 தேர்தல்). தமிழர் என்ற காரணத்துக்காகவே பலரை உள்ளூராட்சி உறுப்பினர், கல்வி அறக்காப்பாளர், பாராளுமன்ற உறுப்பினராக்கினோம். இவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள், தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதனை நீங்கள் அறிவீர்கள். ஆகக் குறைந்த பட்சம், இலங்கையில் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடிந்ததா?, காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என, இலங்கை அரசை பதில் கூறச் செய்ய முடிந்ததா? அவர்களால் செய்ய முடியாது, ஏனெனில் அவர்கள் சார்ந்துள்ள அரசுகளுக்கு, அதாவது உள்ளூராட்சி சபைக்கோ அல்லது மாநில சபைக்கோ, இவ்வாறான விடயங்களை தீர்மானிக்கும் உரிமை இல்லை. அது மத்திய அரசுக்கு மட்டுமேயுரியது. மத்திய அரசின் வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்களாலேயே பல விடயங்கள் தீர்மானிக்கப்படும்.
தமிழ் என இங்கு இவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்கள் அரசியல் கைதிகளைப் பற்றியோ, காணாமல் போனோரைப் பற்றியோ என்ன விடயத்தை இங்கு முன்வைத்தார்கள்?
நடுத்தர வர்க்க ஒன்ராரியோ வாசியை ஒடுக்கும் கொள்கைளை கொண்டிருக்கும கட்சிக்கு, தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக வாக்களிக்க வேண்டும் என நிர்ப்பந்திப்பது எந்த வகையில் நியாயாம்?
கனடிய தேர்தல்களில், தமிழரை கனடிய கட்சிகளின் கொள்கைளை மதிப்பீடு செய்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். இங்கு அனுமதி என்று கூறுவதன் காரணம், சமூக ஊடகங்கள் உட்பட்ட ஊடகங்களில் தொடர்ச்சியாக நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்;. பிரச்சாரப்படுத்தப்படுகின்றனர். தமிழர்களை சுயாதீனமாக வாக்களிக்க அனுமதியுங்கள். அதுவே எதிர்காலத்தில் தமிழ் சமூகத்துக்கு ஆரோக்கியமானதாகவிருக்கும்.

 

மார்ச் 2018 இன் இகுருவி பத்திரிகையில் ரதன் அவர்களால் எழுதப்பட்டது

Share This Post

Post Comment