தீர்வு வேண்டுமானால் தமிழர்கள் சமஷ்டியைக் கைவிடவேண்டும் – சம்பிக்க!

Thermo-Care-Heating

sampikkaநாட்டில் நல்லிணக்கம் உருவாக்கப்படவும், தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கவேண்டுமெனினும் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் குழுக்களும் முதலில் பிரிவினைவாத இனவாதக் கொள்கையையும் சமஸ்டித் தீர்வினையும் கைவிடவேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமிழர் தரப்பு சர்வதேசத்திடம் வலியுறுத்திவரும் நிலையில், இது தொடர்பாக ஹெல உறுமயவின் கருத்துத் தொடர்பாகக் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழர் தரப்பு கிடைக்காத ஒரு சமஸ்டித் தீர்வை எதிர்பார்த்து வருகின்றது. இலங்கையில் சமஸ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை.

எனவே சமஸ்டியைக் கைவிட்டு ஒன்றிணைந்து எதிர்கால ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்ப முன்வரவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment