சக தமிழரை குடிபோதையில் கத்தியால் வெட்டிய வழக்கில் சிங்கப்பூரில் தமிழருக்கு 3 ஆண்டு சிறை

ekuruvi-aiya8-X3

jejil77சிங்கப்பூரில் அருணாசலம் மணிகண்டன் என்பவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வந்தார். அவருடன் கணேசன் அருண் பிரகாஷ் என்ற மற்றொரு தமிழரும், இன்னும் பலரும் தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு நாள் அருணாசலம் மது குடித்து விட்டு வந்து அறையில் வாந்தி எடுத்து அசிங்கமாக்கி விட்டார். அதைக் கண்ட கணேசன், அவரை அறையை கழுவி சுத்தம் செய்யுமாறு கூறினார். ஆனால் அதை அருணாசலம் செய்யவில்லை. இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த அவர்களின் மேற்பார்வையாளர் இதில் தலையிட்டு அருணாசலத்தை அறையை சுத்தம் செய்யுமாறு கூறினார்.

அப்போது குடிபோதையில் இருந்த அருணாசலம் பொங்கி எழுந்து, கணேசனை கத்தியை எடுத்து வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அதைத் தொடர்ந்து சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது தொடர்பாக அருணாசலம் கைது செய்யப்பட்டார். அவர் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் சுஜாதா செல்வகுமார், தனது கட்சிக்காரர் செய்த தவறுக்காக இப்போது மனம் வருந்துவதாக கூறி குறைவான தண்டனை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி ஹமிதா இப்ராகிம் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 6 பிரம்படியும் வழங்குமாறு உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தார்.

Share This Post

Post Comment