தமிழக அரசின் தீர்மானத்திற்கு கருணாநிதி ஆதரவு

Facebook Cover V02

karunanithiமுன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் கருத்தைக் கேட்டு தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெக்ரிஷிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக அரசின் இந்த முடிவை ஆதரிக்கும் விதமாக திமுக தலைவர் கருணாநிதியும், அவர்களை விடுதலை செய்ய ஒப்புதல் தர மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை பெற்ற நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றி 2014ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்வது என தமிழக சட்டசபையில் 2014ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் சமயத்தில், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர்.

இதனை பரிசீலித்த தமிழக அரசு, மத்திய அரசிடம் கருத்து கேட்டு கடிதம் எழுதி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 25 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் இந்த ஏழு பேரும், ஏறத்தாழ இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

மேலும் கடந்த முறை தமிழக அரசு மேற்கொண்ட தவறான அணுகுமுறையால் இவர்களது விடுதலை தள்ளிப்போனது.

தற்போது, தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment