ஒன்றாரியோ மாகாண முழுவதும் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்கள் மாதமாக பிரகடனப்படுத்தும் சட்ட வரைபின் முதல் வாசிப்பு
Jun 13 2012 05:40:24
தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்கும் சட்டவரைபினை டொன்வெலி மேற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்மைக்கல் கொற்றியு நேற்று குயின்ஸ் பார்க்கிலுள்ள ஒன்றாரியோ மாகாண பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்த சட்டவரைபின் முதல் வாசிப்பானது ஏக மனதாக பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் தை மாதம் ஒன்றாரியோவில் தமிழரின் பாரப்பரிய மரபுத் திங்கள் ஆக விரைவில் சட்டமாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இது கனடிய தமிழர்கள் மத்தியில் மிகுந்தஉற்சாகத்தையும் நம்பிக்கையை தந்திருக்கின்றது என்பதுடன் எதிர் காலத்தில் தை மாதத்தை தமிழர்களின் மாதமாக கனடா முழுவதிலும் கனடா அரசுஅங்கீகரிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக பல தமிழர் அமைப்புக்கள் மத்திய அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என தெரிய வருகின்றது.
ஏற்கனவே மார்க்கம் நகரசபையின் தமிழ் பேசும்உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் முயற்சியினால் தை மாதத்தை கனடாவில் மார்க்கம் நகரசபை தமிழ் மரபுரிமை மாதமாகமுதல் முதலாக அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்
ஒன்றோரியோவின் அனைத்து நகரப்புறப் பகுதிகளிலும் மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை தொட்டியில் போடும் போது தெள்ளத் தெளிவான பாலித்தீன் பைகளையே உபயோகப்படுத்த வேண்டும்