இவரும் அவர் தானா?

ekuruvi-aiya8-X3

எதிரிகளால் வரும் ஆபத்துக்களை விட எதிர்பாராமல் நண்பர்களிடமிருந்துவரும் ஆபத்துக்களே அதிகம் என்று பலரும் பலதடவைகள் அனுபவித்து எழுதியிருக்கிறார்கள்.இதில் அழுது கொட்டுவதற்கு எதுவுமில்லை.

அரசியலில்  இது இன்னும் மோசம்உண்மையில் அரசியல்வாதிகள்  மட்டும் தான் உலகத்திலேயே தங்கள் தேவைகளுக்காகவும் நன்மைகளுக்காகவும் கட்சி, மத, இனவேறு பாடுகளின்றி ஒற்றுமையாகச் செயற்படுபவர்கள் (உதாரணம்தமக்குத்தாமேசம்பளஉயர்வுகொடுத்துத்தள்ளுவது).

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இடதுசாரி வலதுசாரி நடுவிலான் என்றெல்லாம் கோஷங்களோடும் கொள்கை முழக்கங்களோடும் ஊர்வலம் வந்து அப்பாவிமக்களை நம்பவைத்து ஆசனத்தில் அமர்ந்தவுடன்யார் நீ ,எதற்கும் அலுவலகத்தில் மனுவைக் கொடுத்துவிட்டுப் போபின்னர் பார்க்கலாம்என்ற சுபாவம் வந்து தொலைத்து விடுகிறது. இது நம்மசமூகத்தில் மட்டும் நடைபெறுவதல்ல  என்பதுகொஞ்சம் ஆறுதலாகவிருக்கலாம்.

tam-sivathasanதென்நாட்டில் துரும்பர் அவதாரம் எடுக்கப்போகிறார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிடட நிலையில் நம்மநாட்டில்இது 2016′ என்று நாமம் போட்டுக் கொண்டு வந்த இளவரசர் சமீபத்தில் போட்ட குண்டு ஏனோ எனது செவிப்பறையைத் தாக்கியிருக்கிறது.

ஹார்ப்பரசரோடு ஒப்பிடுகையில் இவரது வெளிநாட்டுக்கு கொள்கையில்பலமாற்றங்கள் நிகழும்உலகில் போர்கள் தணிந்து மக்கள் தம்மைத் தாமே தூக்கி நிறுத்திக் கொள்ள, ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு இடைவெளி கிடைக்கும் என்று நம்பவைக்கப்படடவர்கள்என்ன இவரும் அவர்தானா?’ என்று மூக்கில் விரலையே வைக்கிறார்கள்.

சிவப்பு சட்டைகளைப் போட்டுக் கொண்டு மனித உரிமைகள் பற்றிப்  பேசுபவர்களது நிஜவாழ்க்கை  நீலச்  சட்டைபோட்டுக் கொண்டு இனவாதம் பேசுபவர்களது வாழ்க்கையை விடமோசமானது என்ற எண்ணம் உங்களிடமும் இருக்கிறது என்றால் நானும் உங்களினம்.

நம்ம நாட்டு இளவரசர் உலகத்துக்கு ப்படி எல்லாம் இம்சையரசராகமாறுவாரென்று நான் நினைத்திருக்கவில்லை.

ஈராக்கிலிருந்து மூன்று நான்கு போர் விமானங்களை மீளப்பெற்று விட்டு 200 காலாட்படைகளை அனுப்பி வைத்தது அமைதி விரும்பி செய்யும் கடமையல்ல. ரஷ்ய எல்லை நாடுகளில் நேட்டொ குவிக்கும் படைகளில் ட்ரூடோவின்படைகள் முன்னணி வகிக்குமாம்சவூதி கொலையரசர்களுக்கு கோடி கோடியாக ஆயுதங்களை வழங்கியமை அப்பட்டமான நபும்சகத்தனம்.

பல வருடங்களுக்கு முன்னர் ஊரிலிருந்து வந்தவர் ஒருவர் சொன்ன கதை இது.

ஒருவருக்கு ஒரு இயக்கத்தில்  சேரவிருப்பம். உள்ளூர் ஆள் பிடிகாரரை அணுகி யபோது  அவரது நோஞ்சான் உடலின்  வீரம் போதாது என்று சந்தியில் வைத்து அவமானப்படுத்திவிடடார். . மனம் குழம்பிப்போன வீரவான் கொஞ்சம்பொறுநான் யாரெண்டுகாட்டிறன் என்று வீட்டுக்குப் போய்  கோடரி ஒன்றைக் கொண்டு வந்து சந்தியில் நின்ற ஒரு முதியவரைக் கொத்திக் கொலை செய்து விட்டு இப்போ நான் வீரனில்லையா‘? என்று கேடடாராம்.

இது ஒரு செவிவழிக்கதை எனவே எனக்குத் தெரிந்தது.அன்றய சூழழில் இது நடந்திருக்க வாய்ப்பிருந்தது என்பது மட்டும் உண்மை.

ட்ரூடோவின்  நகர்வுகளை பார்க்க இந்த நோஞ்சானின் கதை தான் நினைவுக்கு  வந்தது. ‘நானும் ரவுடி தாண்டாஎன்று வடிவேலு போலீஸ்காரரிடம் கைதுசெய்யும்  படிகெஞ்சுவதைப் போல இருக்கிறது ட்ரூடோவின் நடவடிக்கைகள்.

எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் அதையும் மீறி உலகசமாதானத்தைக் கொண்டுவருவதும் ஒருவகை வீரம் தான். 1964 இல் பல எதிர்ப்புகள் மத்தியிலும்அமெரிக்ககுடியுரிமைச் சட்ட த்தில் கையெழுத்திட்டு நிறப்பிரிகைச்சடடத்தை இல்லாதொழித்த ஜனாதிபதி லிண்டன்ஜோன்சன்  போன்றவர்களைத் தான் நான் வீரர் என்றுசொல்லுவேன்.

ஒவ்வொருவாரமும் ஆளில்லா விமானத்தை ஏவுவதன் மூலம் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று விட்டு உலக சமாதானத்துக்கான நோபல்பரிசைப் பெற்றுக்  கொண்ட பராக் ஒபா மாவீரர்அல்ல.

ஹார்ப்பரை வெறுப்பதற்குப் பலகாரணங்கள் இருக்கலாம்.அது நடிக்காமையின் விளைவு. ட்ரூடோவைப்  பலர் விரும்புவதற்குக் காரணம் அவர் சிறந்த நடிகனாக இருப்பதனால்எனவும் பார்க்கலாம்.

உள் நாட்டில் நிலைமை சீராக இருக்க வேண்டுமானால் வெளியுறவுக் கொள்கை நன்றாக இருக்க வேண்டும். இதை புரிந்து கொள்ள ஒருவர் ஐன்ஸ்டினாக இருக்கவேண்டு மென்பதில்லை.

உலகின் இன்றய நிகழ்வுகள் பேரழிவுக்கான கட்டியத்தைக் கூறுபனவாகவேஇருக்கின்றன.

அமெரிக்காவில் துரும்பரின் வருகை வெள்ளை அதிகாரத்தின் மீளெழுச்சியின் அறிவிப்பு. நீண்ட காலமாகக்கைவிடப்படட சாமான்ய வெள்ளையரின் சுனாமியைத் திசைதிரும்பியவர் தான் துரும்பர்.அதில் அடிபடப்  போவது வெள்ளையரல்லாதோர் தான். கிளின்ரன் ஒபாமா போன்றோரைப்  பாவித்து தமது இலாபங்களை பெருக்கிய பெருவணிக நிறுவனங்களின் உலகமயமாக்கலின் சோபை இழந்து போன அமெரிக்காவை மீட்டெடுக்கப் போவதாக உருக்கொண்டிருக்கும் துரும்பரை  இந்தத் தடவை யாராலும் நிறுத்த முடியாது.என்று தான்படுகிறது.

உலக நிகழ்வுகள் இந்த உருவுக்கு வேப்பிலை யாட்டும். பிரித்தானியாவின் உடைவு இந்தப் பெருவிளையாட்டின் ஒரு அங்கம் தான்.

மத்திய கிழக்கில் மேற்கு நாடுகள் விளையாடிய இராணுவ விளையாட்டுக்களின்பெறு பேறுகளை அப்பாவிகள் தான் அனுபவிக்கின்றனர். பிணைவாடைகள் பெருவணிகர்களை எதுவும் செய்யாது.

புஷ்ஆட்சியை விட கிளின்ரன் ஆட்சியின் போதுதான் அதிக உலக நாடுகளில் குண்டுகள் போடப்படடன. அதிக எண்ணிக்கையில் கறுப்பர்களைச் சிறையில் தள்ளியது கிளின்ரன் அரசு தான். அடுத்த கிளின்ரன் ஆட்சிக்கு வந்தாலும் அவர் முதலில் செய்யப் போவது ஏதோ ஒரு நாட்டுடன் போர் தொடுப்பதே.அவர் வணிக முதலைகளின் சேவகி. போர் பணம் செய்யும் .நோஞ்சான்களை வீரர்களாகக் காட்டும்.

துரும்பர் நிறைய சவுண்ட் கொடுக்கிறார்.கடிப்பார் மாதிரித் தெரியவில்லை. எனக்குப் பயம் சிரிப்பவர்கள்  மீதுதான்.

சிவதாசன்

ஜூலை மாத eகுருவி பத்திரிகையில் வெளிவந்தது

aadivelvilaa

Share This Post

Post Comment