ஆப்கானிஸ்தானில் முக்கிய மாவட்டத்தை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர்

ekuruvi-aiya8-X3

Taliban-seize-district-in-Afghanistanஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனி நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்தது. ஆனாலும் கூட அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராமல் இன்னும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதிலும், தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதிலும் தீவிரமாக உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு அங்கு உள்ள கஜினி மாகாணத்தின் முக்கிய மாவட்டமான கவாஜா ஒமரி மாவட்டத்தின் அரசு வளாகம் மீது அவர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். நேற்று அதிகாலை வரை இந்த தாக்குதல் நீடித்தது.
இந்த தாக்குதலில் அந்த மாவட்டத்தின் கவர்னர் அலி தோஸ்த் ஷாம்ஸ் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் கவர்னரின் 2 மெய்க்காப்பாளர்கள், 7 போலீஸ் அதிகாரிகள், 5 உளவுத்துறை அதிகாரிகளும் அடங்குவர்.
இந்த தாக்குதலின் முடிவில், அந்த மாவட்டத்தை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அத்துடன் மாவட்ட தலைமையகத்தை அவர்கள் தீயிட்டு கொளுத்தினர்.
இந்த தாக்குதல் பற்றி தலீபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா விடுத்து உள்ள அறிக்கையில், கவாஜா ஒமரி மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 20 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.
இந்த மாவட்டம், வீழ்ந்து இருப்பது ஆப்கானிஸ்தான் அரசு தரப்புக்கு பலத்த பின்னடைவு என கூறப்படுகிறது.

Share This Post

Post Comment