தைவானில் ரயில் தடம் புரண்டு விபத்து – 18 பேர் பலி

தைவான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் டைடுங் நகரை நோக்கி சென்ற ரயில் தடம் புரண்டதில் 18 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 160 பேர் காயமடைந்தனர்.

டைடுங் நகரை நோக்கி சென்ற அந்த ரயிலில் 300 பேர் பயணம் செய்ததாக அந்நாட்டு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து நடைபெற்ற ரயிலில் 310 பேர் பயணம் செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி மாலை 4.50 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த ரயில் தடமானது தைவானிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமானது.

விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






Related News

  • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
  • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
  • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
  • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *