Tamil Nadu

 
 

ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்

இலங்கை நாடாளுமன்ற கூட்டம் இன்று காலை பத்து மணியளவில் பெரும் கூச்சல் குழப்பத்துடன் ஆரம்பமாகியிருந்தது. எனினும், ராஜபக்சே தனது உரையை ஆரம்பித்து நிறைவு செய்தவுடன் வாக்கெடுப்பு நடத்த முயற்சி செய்யப்பட்டது. இந்த முயற்சியின் பின்னர் நாடாளுமன்றில் அமளி ஏற்பட்டதுடன், ராஜபக்சே அணி எம்பிக்கள் சபாநாயகரை சுற்றிவளைத்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா, தான் சபாநாயகரை பாதுகாத்ததாக தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். எம்பிக்களிடையே நடந்த மோதலில் சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மோதல் அதிகமான நிலையில், சாபநாயகர், ராஜபக்சே மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளார்.


சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நீதிபதிகள் அமர்வு, அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில்,Read More


கஜா புயல் தனியார் நிறுவன பணியாளர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் -தமிழக அரசு

கஜா புயல் காரணமாக 7 மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் நாகை மாவட்டத்தில் கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கஜா புயல் அதிதீவிர புயலாக மாறியது. கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. – நாகைக்கு வடகிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கஜா புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 17 கிலோ மீட்டராக குறைந்து உள்ளது என  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கஜா புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் துறைமுகத்தில் 9-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுRead More


அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வரும் நவம்பர் 18-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை வியட்நாம் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது  பல ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே கையெழுத்தாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி வியட்நாம் சென்றார். அப்போது  இருநாடுகளுக்கிடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. மேலும், இந்தியாவுடன் பாதுகாப்பு துறையில் ஒத்துழைத்து செயல்படுவதற்காக  வியட்நாம் நாட்டுக்கு ரூ.3,250 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்

தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல். இன்று இரவு முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை மாலை கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும், கஜா புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது, அது தற்போது 10 கிலோ மீட்டராக அதிகரித்து உள்ளது. கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். இன்று பகலில் கஜா புயல் நகர்வு வேகம் அதிகரித்துள்ளது. இரவுக்குள் கஜா புயல் வேகம் பல மடங்கு பெருகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகRead More


அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி

அய்யப்பன் ஆசிர்வாதம் காரணமாகவே, சுப்ரீம் கோர்ட் மறு சீராய்வு செய்ய ஒப்பு கொண்டதாக, சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு கூறியுள்ளார். சபரிமலை கோயில் விவகாரத்தில் மறு சீராய்வு செய்யும் சுப்ரீம் கோர்ட்டின் முடிவு தொடர்பாக தந்திரி கண்டராரூ ராஜீவரு கூறியதாவது: கடவுள் அய்யப்பன் ஆசிர்வாதத்தால் தான் சுப்ரீம்கோர்ட் மறு சீராய்வு செய்ய முடிவு செய்துள்ளது. பக்தர்கள் மனமுருகி வேண்டியதற்கு பலன் கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை. கோர்ட்டின் முடிவால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கேரள வெள்ளம் மற்றும் கோர்ட் உத்தரவு நமக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நம்மை அய்யப்பன் காப்பாற்றியுள்ளார். கோர்ட்டில் மீண்டும் விசாரணை என்ற முடிவு நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி,22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் போது, அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவை சபரிமலையில் மீண்டும் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்படும். இதுRead More


நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி

சத்தீஷ்காரில் முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.  இதில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் 2வது கட்ட தேர்தல் வருகிற 20ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, மோடி பிரதமரான 2014ம் ஆண்டுக்கு பின்னரே நாட்டின் வளர்ச்சி தொடங்கியது என மோடி கூறி வருகிறார். அவருக்கு, மக்களால் நாடு நடத்தப்படுகிறது என்றும் ஒரு மனிதரால் அல்ல என்பது கூட தெரியவில்லை.  இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு அவர் உங்களை புண்படுத்தி வருகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தியது ஆகியவற்றால் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் முடங்கினர்.  காங்கிரஸ் கட்சியானது இளைஞர்கள் வர்த்தகம் செய்ய, வங்கிகளில் இருந்து கடன் பெற ஊக்குவிக்கும் எனRead More


சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஜனவரி,22 முதல் விசாரணை நடக்கும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இந்துக்களின் நம்பிக்கையையும் பாரம்பரியத்தையும் பற்றி கவலைப்படாமல் கோர்ட் உத்தரவை அமல்படுத்துவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து 4 ரிட் மனுக்களும், உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி 49 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது இன்று (நவம்வர்,13) விசாரணைக்கு வந்தது. அப்போது, மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் ஜனவரி,22 முதல் விசாரணை நடக்கும்Read More


கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், கஜா புயல் தற்போது நாகப்பட்டினம் வடகிழக்கே சுமார் 790 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தென் மேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (நவம்பர், 15) பாம்பனுக்கும் கடலூருக்கு இடையே கரையை கடக்கும். அப்போது கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும். 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். 100 கி.மீ., வேகத்தில் கூட காற்றுவீசக்கூடும். 15ம் தேதி காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மீனவர்கள்Read More


சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு

சத்தீஷ்காரில் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் இன்று தொடங்கியது.  இதில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் நிறைந்த 10 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி 3 மணியுடன் நிறைவடைந்தது.  இதேபோன்று மற்ற 8 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி 5 மணிவரை நடைபெறுகிறது. இந்த நிலையில், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் 18 தொகுதிகளுக்கான வாக்கு பதிவில் மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று 15 வருடங்களுக்கு பின்னர் சுக்மாவில் உள்ள அடுகு கிராமத்தில் தேர்தல் நடந்தது.  இங்கு 44 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளித்துள்ளனர். இந்த வாக்கு பதிவில் பயன்படுத்தப்பட்ட 31 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் 51 ஓட்டுப்பதிவு செய்ததற்கான தணிக்கை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் தொழில் நுட்பRead More