RJ Multi-Litho

 
 

மானிப்பாயிலிருந்து கனடா வந்து கோடிஸ்வரனான படிக்காதவன்

திரு இராஜீவகரன் முத்துராமன்.  அதிநவீன அச்சுயந்திரங்களை கொண்டுள்ளது RJ Multi-Litho  என்ற அச்சுக் கூடத்தின் நிறுவனர்.  பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான  . இரண்டு பெரிய கட்டிடத் தொகுதிகள் உண்டு. படித்தது பத்தாம் வகுப்பு மட்டுமே. அந்தக் குறையை ஈடுசெய்யத் தன்னைச் சுற்றிப்  படித்தவர்களை, துறைசார் விற்பன்னர்களை தன்னோடு வைத்திருப்பதாகச் சொல்கிறார். தனக்கு குளியல் அறையைத் தூய்மைப் படுத்தும் தொழிலிருந்து எல்லா வேலையும் அத்துப்படி என்கிறார். குப்பையில் இருந்து கோபுரத்துக்கு.. என்ற மறுசுழற்சி முறையை வெறும் பேச்சாக இல்லாமல் உண்மையாகவே எண்பித்துக் காட்டியுள்ளார். தொடக்கம் ஒரு சிறிய வாடகை அறை. தனது 41 அகவையில் இந்தத் தொழிலைத் தொடங்கியதாக சொன்னார்.  இவருக்குரிய புதிய வெளிச்சம் Best Leadership Award விருதை HomeLife/Future Reality Inc. Brokerage நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது. மருதடியானின் தேர் உலா வரும் மானிப்பாய்Read More