lifestyle

 
 

குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்

குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ரொறன்ரோவின் அண்மைய புள்ளிவிபரங்களை ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை வெளியிட்டுள்ளது. அந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே மாணவர்களின் உடல் உள திறன் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததுடன் ஒப்பிடுகையில் தற்போது குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. அந்த வகையில் மாணவர்களின் உடல் ஆராக்கியம் மற்றும் உளவளத் திறன் என்பன கடந்த ஐந்து ஆண்டுகளில படிப்படியாக குறைவடைந்து வந்துள்ளமை தெரியவருகிறது. 2,20,000 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிபரம் தொகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் உளவளத் திறனானது 69 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும், 7ஆம் வகுப்பு மாணவர்களின் உளவளத் திறன் 87Read More


முகப்பரு வருவதற்கான காரணங்கள்

தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது. பொதுவாக ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கக்கூடியது. இது பதின்ம வயதில் வாலிப வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தின் போது துவங்குகிறது. காரணங்கள்: 1. எண்ணெய்ச் சுரப்பி (மெழுகு சுரப்பி) களில் ஏற்படும் அடைப்பு, சுரப்பி பெரிதாதல், எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, இறந்த தோல் செல்கள், சூழ்நிலையால் அசுத்தங்கள், 2. நுண்கிருமி தாக்கம் : “புரோப்யோளி பாக்டீரியம் ஆக்னே” இதன் தாக்கம் காரணமாக பருக்களில் சுழற்சி ஏற்பட்டு, சிவந்து, சீழ்பிடிக்க வகை செய்கிறது. மேலும் இதனால் பருக்கள், முகத்தில் கரும்புள்ளி போன்றவை ஏற்படுகிறது. 3. காரணிகள்: 1. மரபு வழி (குடும்ப வழி) 2. ஹார்மோன் மாற்றம், 3. மாதவிடாய் சுழற்சி, 4. தோல் சுழற்சி,5. மன அழுத்தம்,Read More


சரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி பேஸ் பேக்

ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இறுதியில் ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள். சிறிது துளசி இலைகளை அரைத்து, அத்டன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் காணாமல் போய்விடும். சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 2 சிட்டிகை துளசி பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். துளசிRead More


குழந்தைகளுக்கு ரப்பர் நிப்பிளால் ஏற்படும் பாதிப்புகள்

அழும் குழந்தை, சோர்வாக மகிழ்ச்சி இல்லாத குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப பலரும் இந்த ரப்பர் நிப்பிளை (Baby Pacifier) பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. 6 மாதமாக பயன்படுத்தும் ரப்பர் நிப்பிள் குழந்தையை தாய்ப்பால் அருந்தவிடாமல் பாதிக்க செய்யும். கழுத்து போன்ற பகுதிகளில் அடைத்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும். அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தொடர்ந்து இந்த ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் பற்கள் தொடர்பான பிரச்சனைகளும் வரலாம். குழந்தை பேசுவதில் பிரச்னை ஏற்படலாம். ரப்பர் நிப்பிளை தொடர்ந்து வாயில் வைப்பதால் கிருமிகள் வளர வாய்ப்பைத் தருகிறது. கிருமிகள் வளர அதிகம் உதவுகிறது. சுத்தப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகையில் வாயில் தொற்றும் ஏற்படுகிறது. Staphylococcus bacteria, Candida fungus ஆகியவை குழந்தைகளை பாதிக்கும். பெரும்பாலும் இந்த செயற்கைRead More


மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

இன்று மிக்ஸி இல்லாத வீடுகளை பார்ப்பதே அரிது. எனவே, எல்லோருக்குமே மிக்ஸியின் பயன்பாடு மற்றும் அதன் அம்சங்கள் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டிய மிக்ஸியை புதிய அம்சங்களை பார்த்து எப்படி தேர்வு செய்வது என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். மிக்ஸி வாங்கும்போது மேலோட்டமாக கவனிக்க வேண்டியது அதன் வாட்ஸ் (மின் உபயோகம்), ஆர்பிஎம், ஜார்களின் எண்ணிக்கை, உத்திரவாதம் மற்றும் விலை. இதில் வாட்ஸ் எனும்போது 500 முதல் 750 வாட்ஸ் மின்சாரத்திறன் கொண்ட மிக்ஸியை தேர்ந்தெடுப்பது நல்லது. 1800-2000 ஆர்பிஎம் கொண்ட மிக்ஸியை தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாண்டுகள் உத்திரவாதம் உள்ளதாலும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன பிளேட் கொண்டதும் ஆன மிக்ஸியை தேர்ந்தெடுப்பதும் நல்லது. பொதுவாக பெரிய ஜார்கள் இரண்டும், ஜீசர் ஜார் ஒன்றும், சிறிய ஜார் ஒன்றும் போதுமானது. ஜீசர் ஜார் உள்ள மிக்சியைRead More


எதிர்மறை எண்ணங்களை அழிக்கும் சிவலிங்க முத்திரை

சிவலிங்க வடிவம் தனக்குள் அனைத்து வடிவங்களையும் அடக்கியுள்ளதோடு, ஆராய்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாபெரும் சக்தியையும், பல்வேறு ரகசியங்களையும் பொதிந்து வைத்துள்ளது. இந்த சிவலிங்க வடிவில் காணப்படும் சிவலிங்க முத்திரை அனைத்து நல்ல பலன்களையும் அளிக்கவல்லது. எப்படிச் செய்வது? ஆசனத்தில் அமர்ந்து, இடது கையை கிண்ணம் போல் லேசாகக் குழித்து, உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு, தொப்புள் பகுதிக்கு நேரே வைக்கவும். அதன்மேல், மற்றொரு கையை  நான்கு விரல்களையும் மூடிய நிலையிலும் கட்டை விரல் நேராக இருக்கும்படியும் வைக்க வேண்டும் கண்களை மூடி அமர்ந்து கொள்ளவும். ஒருநாளைக்கு இருமுறை என 5 நிமிடங்கள் இதைச் செய்யலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம். பலன்கள் சிவலிங்க முத்திரை செய்யும்போது, நமது உடலில் பஞ்ச பூதங்களும் அதனதன் அளவீடுகளில் நிலைத்து, ஆக்க சக்தியை வெளியிடுகின்றன. உயிரோட்டத்தின் மொத்த வடிவமாக நமது உடல் மாறுவதால் தீயRead More


இயற்கை முறையில் முக அழகை பராமரிக்கும் வழிகள்

வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை அதிகரிக்கலாம். இயற்கையான முறையில் நம் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம். 1. இயற்கை முறையிலேயே ப்ளீச் செய்ய முடியும். ஒரு டீஸ்பூன் பார்லி பவுடருடன் எலுமிச்சைசாறும் பாலும் கலந்து, ப்ளீச்சாக உபயோகிக்கலாம். இது, முகத்தை பளிச் என மாற்றும். வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கும். 2. கிளிசரினுக்குப் பதிலாகப் பால் உபயோகித்து மசாஜ் செய்யலாம். இது சருமத்துக்கு ஊட்டத்தையும் குளிர்ச்சியையும் ஏற்படுத்தி, முகப்பொலிவை அதிகப்படுத்தும். 3. ரவையைத் தயிரில் ஊறவைத்து, ஸ்கர்ப்பாக உபயோகிக்கலாம். இது, முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இளமையுடன் இருக்கவும், முக அழகை அதிகரிக்கவும் செய்கிறது. ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே உபயோகிக்க வேண்டும். 4. இப்போது பலருக்கும் இருக்கும் பிரச்சனை, வொய்ட் மார்க்ஸ், பிளாக் மார்க்ஸ். இதற்கு, வீட்டிலேயே தினமும் சூடான தண்ணீரில்Read More


மீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க தனி இ-மெயில் முகவரியை அறிவித்தது டெல்லி பெண்கள் ஆணையம்

சமூக வலைதளங்களில் மீடூ பிரசாரம் மூலம் பெண்கள் பாலியல் தொல்லைகள் குறித்து புகார்கள் தெரிவித்து வருகிறார்கள். இதன்மூலம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. பெண்கள் ஆணையமும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க metoodcw@gmail.com என்ற இ-மெயில் முகவரியை டெல்லி பெண்கள் ஆணையம் அறிவித்துள்ளது. மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய 181 என்ற உதவி எண்ணையும் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையம் மற்றும் பெண்கள் ஆணையத்திடம் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கும் புகார்கள் குற்றவாளிகளை சிறையில் அடைக்க உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


ஒரு கிளாஸ் மது வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் – ஆய்வில் தகவல்

சியர்ஸ்….. இந்த சப்தம் எத்தனை முறை ஒரு நாளைக்கு கேட்கிறதோ அத்தனை நெருக்கத்துக்கு எமன் வந்துகொண்டிருக்கிறான். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 18 வயது முதல் 85 வயது வரை உள்ள 4 லட்சம் மக்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்த உண்மை இது. ஆம். வெளிநாடுகளில் பொதுவாகவே சாதரணமாக தண்ணீர் குடிப்பதுபோல ஒரு கிளாஸ் மதுவை ஆயாசமாக குடித்து செல்வதை நாம் படங்களில் பார்த்து இருக்கிறோம். அதை நம்ம ஊரிலும் பின்பற்றவும் துவங்கிவிட்டோம். சில ஆய்வு அறிக்கைகளின்படி, தினமும் ஒரு கிளாஸ் மது அருந்துவது இதயநோயை தடுக்கும். ஆனால், தற்போது சாரா எம் ஹார்ட்ஸ் என்பவர் நடத்திய இந்த ஆய்வில், ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் மது அருந்துவதன் மூலம் உங்கள் வாழ்நாளில் 20 சதவிகிதத்தை இழக்கிறீர்களாம். அதாவது 100 வயது வாழ வேண்டியவர் 80Read More


குருப்பெயர்ச்சி பலன்கள் – 2018-2019

குரு பெயர்ச்சி / (Guru Peyarchi) திரு கணித பஞ்சாங்கத்தின் படி வியாழக்கிழமை அக்டோபர் 11, 2018 4:49 AM இந்திய நேரப்படி துலா ராசியில் (Thula Rasi) இருந்து விருச்சிக (Vrischika Rasi) ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் நவம்பர் 4, 2019 2:39 PM IST வரை விருச்சிக (Vrischika Rasi) ராசியில் சஞ்சரிக்கிறார். குரு பார்வை கோடி நன்மை. குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலனடையும். குருவின் பார்வை இந்த முறை மீனம், ரிஷபம், கடகம் ராசிகளின் மீது விழுகிறது. கடந்த ஓராண்டு காலம் சிரமத்தை சந்தித்த இந்த ராசிக்காரர்கள் இனி நன்மைகளை அடைவார்கள். குருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று இடப்பெயர்ச்சி அடைகிறார். வரும் 11ஆம் தேதியன்று திருக்கணித்தப்பஞ்சாங்கப்படி இடம்பெயர்கிறார். இந்த இரண்டு நாட்களிலும் குரு பரிகார தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.Read More