Featured Right

 
 

உலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளி விடுமுறைக்கு ரிலீசாக இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ‘சர்கார்’ படத்தின் டீசரை நேற்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட்டது. இந்த டீசருக்காக விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பெரும்பாலானோர் காத்திருந்தனர். டீசர் வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமான முறை டீசர் பார்க்கப்பட்டது. 20 நிமிடங்களில் 20 லட்சம் பார்வை, 35 நிமிடங்களில் 30 லட்சம் பார்வை என நேரம் போகப்போக அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. பார்வைகள், விருப்பங்கள், ரசிகர்களின் கருத்துகள் என்று மூன்று விதங்களில் ‘சர்கார்’ டீசர் சாதனை படைத்துள்ளது. ஐந்தரைRead More


ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் – விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்’. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டீசரை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இன்று மாலை 6 வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாலை 6 மணிக்கு சர்கார் டீசர் வெளியானது. இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கூகுளின் தலைமை பொறுப்புக்கு வந்த சுந்தர் பிச்சையின் வேடத்தில் தான் விஜய் நடிக்கிறார்.


இயற்கை முறையில் தலைவலியை குணமாக்கலாம்

உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான். அதீத இரைச்சல், செரிமானக் கோளாறு, கணினித்திரை ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கண் நரம்புகளுக்கு ஏற்படும் அழுத்தம்… எனப் பல பிரச்சனைகள் காரணமாக, நரம்புகள் வீக்கம் அடைந்து தலைவலி ஏற்படுகிறது. தலைவலிக்கு வலி நிவாரண மாத்திரைகள், ஜெல்களைப் பயன்படுத்துவதை விட, இயற்கையான உணவு முறை, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலமாகவே தலைவலியைப் போக்க முடியும். மூளை நரம்புகள் சுருங்கி விரியும் தன்மைகொண்டவை. இது அதீதமாகச் செயல்படும்போது தலைவலி ஏற்படும். இதற்கு இஞ்சி மிகச் சிறந்த மருந்து. இஞ்சியில் தலைவலியைப் போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளது. காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு (2 டீஸ்பூன்) குடித்தால், நாள் முழுக்கத் தலைவலி வராமல் தடுக்கலாம். செர்ரிப் பழத்தில் `ஆந்தோசயானின்’ (Anthocyanin) என்னும் நிறமி உள்ளது. இது நரம்புRead More


யுவர் ஹவர் – ஸ்மார்ட்போனை கட்டுப்பாடுடன் பயன்படுத்த செயலி

‘காலம் கண் போன்றது, நேரம் பொன் போன்றது’ என்ற பழமொழியை எல்லாம் இன்றைய நவீன யுகத்தில் நாம் மறந்து வருகிறோம். எழுந்தவுடன் கண் விழிப்பதே செல்போனில் தான் என்றாகிவிட்டது. நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக போன் பார்ப்பதால் நம்மையும் அறியாமல் நாம் அதற்கு அடிமையாகிறோம். இதனால் நமது வேலையும் பாதித்து, உடல் நலமும் கெடுகிறது. இதிலிருந்து நம்மை விடுவிக்கவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ‘யுவர் ஹவர்’ (your hour) ஆன்ட்ராய்டு செயலி (ஆப்). இந்த செயலியில் இருக்கும் அம்சங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவோரை அந்த பழக்கத்தில் இருந்து விடுபட உதவும். ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தததும், நாம் ஒரு நாளில் எத்தனை முறை ஸ்மார்ட்போனை அன்லாக் செய்திருக்கிறோம், எவ்வளவு நேரம் உபயோகித்து இருக்கிறோம் போன்ற தகவல்களை நமக்கு இந்த செயலி தெரியப்படுத்துகிறது. மேலும், ஒரு வாரத்திற்கு நாம் எவ்வளவு நேரம்Read More


சீதக்காதி சென்சார் வெளியீடு – நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்

விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தை தீபாவளிக்கு பிறகு நவம்பர் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகRead More


பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?

சமூக வலைதளங்களில் ராஜாவாக திகழும் பேஸ்புக், கடந்த  2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மார்க் சூகர்பெர்க் உள்ளிட்ட மேலும் சில நபர்களால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று உலக அளவில் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழுகிறது. கோடிக்கணக்கான மக்கள், பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு, கேம்பிரிட்ஜ் அனலடிகா சர்ச்சை என அடுத்தடுத்த சர்ச்சையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியதால், அந்நிறுவனம் கடும் நெருக்கடிக்குள்ளானது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் சேர்மன் பொறுப்பில் இருந்து மார்க் சூகர்பெர்க்கை நீக்குவதற்கான முன்மொழிவை, அந்நிறுவனத்தில் பொது பங்குகளை கொண்டுள்ள பங்குதாரர்கள் முன்மொழிவை கொண்டு வந்துள்ளனர். சில முறைகேடுகளை பேஸ்புக் முறையாக கையளவில்லை என கூறி மார்க்சூகர்பெர்க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் 2019-Read More


96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த 4-ந் தேதி வெளியாகிய 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளிக் காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். அதேபோல் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – அமலாபால் நடிப்பில் 5-ந் தேதி வெளியான சைக்கோ த்ரில்லர் படமாக ராட்சசன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், இரு படங்களின் காட்சிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,Read More


பிஸிபேளாபாத் செய்து சுவைப்போமா?

தேவையான பொருட்கள் : பச்சரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், சின்ன வெங்காயம் – 50 கிராம், தக்காளி – 3, புளி – ஒரு சிறிய உருண்டை, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் -அரை டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 6, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கொப்பரை துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன். செய்முறை: அரிசியையும் பருப்பையும்Read More


எதிர்மறை எண்ணங்களை அழிக்கும் சிவலிங்க முத்திரை

சிவலிங்க வடிவம் தனக்குள் அனைத்து வடிவங்களையும் அடக்கியுள்ளதோடு, ஆராய்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாபெரும் சக்தியையும், பல்வேறு ரகசியங்களையும் பொதிந்து வைத்துள்ளது. இந்த சிவலிங்க வடிவில் காணப்படும் சிவலிங்க முத்திரை அனைத்து நல்ல பலன்களையும் அளிக்கவல்லது. எப்படிச் செய்வது? ஆசனத்தில் அமர்ந்து, இடது கையை கிண்ணம் போல் லேசாகக் குழித்து, உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு, தொப்புள் பகுதிக்கு நேரே வைக்கவும். அதன்மேல், மற்றொரு கையை  நான்கு விரல்களையும் மூடிய நிலையிலும் கட்டை விரல் நேராக இருக்கும்படியும் வைக்க வேண்டும் கண்களை மூடி அமர்ந்து கொள்ளவும். ஒருநாளைக்கு இருமுறை என 5 நிமிடங்கள் இதைச் செய்யலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம். பலன்கள் சிவலிங்க முத்திரை செய்யும்போது, நமது உடலில் பஞ்ச பூதங்களும் அதனதன் அளவீடுகளில் நிலைத்து, ஆக்க சக்தியை வெளியிடுகின்றன. உயிரோட்டத்தின் மொத்த வடிவமாக நமது உடல் மாறுவதால் தீயRead More


ஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்

வீடுகளில் பெரும்பாலானவர்கள் ஊதுபத்தி பயன்படுத்துகிறார்கள். வீடு முழுவதும் நறுமணம் கமழ செய்யும் ஊதுபத்தியில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களும் கலந்திருக்கின்றன. அதிலும் ஒருசில ஊதுபத்தி வகைகளில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. அவைகளால் உடல் உறுப்புகள் கடும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது. சீன பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையைவிட அதிக ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, காற்றை மாசுபடுத்துவதோடு நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நாள்பட்ட நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும்.  இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு நேரும். தொடர்ந்து ஊதுபத்தி உபயோகிக்கும்போது இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு 12 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதிலிருந்து வெளியாகும் புகை ரத்த ஓட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.Read More