Featured Left

 
 

வைரமுத்து மீதான புகாருக்கு என்ன காரணம்? – பாடகி சின்மயி

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சினிமா டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணன், கவிஞர் லீனா மணிமேகலை, பின்னணி பாடகி சின்மயி, டெலிவிஷன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பின்னணி பாடகி சின்மயி நிருபர்களிடம் கூறியதாவது:- வைரமுத்துவை எதிர்த்து நான் குரல் கொடுத்ததற்கு, ஆண்டாள் சர்ச்சை தான் பின்னணி விவகாரம் என்கிறார்கள். அது தவறு. ஆண்டாள் விவகாரத்தில் நான் எந்த கருத்தும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் என்னை வைத்து அரசியல் செய்பவர்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என் வலி எனக்கு தெரியும். வைரமுத்து யார் என்று பெண்களுக்கு நன்றாகவே தெரியும். என்னை போல சக பாடகிகள் பலர் இந்த பிரச்சினையை சந்தித்து இருக்கிறார்கள். ஏதாவது சொல்லிவிட்டால் கணவர் தன்னைRead More


கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

தமிழில் பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இவர் மீது பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்து ‘என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. அவை உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன்’ என்று வைரமுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சுவையான மட்டன் கபாப் செய்வோமா?

தேவையான பொருட்கள் அரைக்க… மட்டன்கொத்துக்கறி – 150 கிராம், இஞ்சி, பூண்டு விழுது- 3 தேக்கரண்டி, சோம்பு தூள் – அரை தேக்கரண்டி, மட்டன் மசாலா – 3 தேக்கரண்டி, உப்பு – சிறிது. செய்முறை : மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த மட்டன் கொத்துகறியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மட்டன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலந்த மட்டன் கலவையை ஒரு குச்சியில் நீளவாக்கில் உருட்டி கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள மட்டன் குச்சிகளை வைத்து நன்றாக திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுக்கவும். சூப்பரான மட்டன் கபாப் தயார்…..


கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி

செம்பருத்தி செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. கர்பப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள். மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும். இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்துRead More


மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

இன்று மிக்ஸி இல்லாத வீடுகளை பார்ப்பதே அரிது. எனவே, எல்லோருக்குமே மிக்ஸியின் பயன்பாடு மற்றும் அதன் அம்சங்கள் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டிய மிக்ஸியை புதிய அம்சங்களை பார்த்து எப்படி தேர்வு செய்வது என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். மிக்ஸி வாங்கும்போது மேலோட்டமாக கவனிக்க வேண்டியது அதன் வாட்ஸ் (மின் உபயோகம்), ஆர்பிஎம், ஜார்களின் எண்ணிக்கை, உத்திரவாதம் மற்றும் விலை. இதில் வாட்ஸ் எனும்போது 500 முதல் 750 வாட்ஸ் மின்சாரத்திறன் கொண்ட மிக்ஸியை தேர்ந்தெடுப்பது நல்லது. 1800-2000 ஆர்பிஎம் கொண்ட மிக்ஸியை தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாண்டுகள் உத்திரவாதம் உள்ளதாலும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன பிளேட் கொண்டதும் ஆன மிக்ஸியை தேர்ந்தெடுப்பதும் நல்லது. பொதுவாக பெரிய ஜார்கள் இரண்டும், ஜீசர் ஜார் ஒன்றும், சிறிய ஜார் ஒன்றும் போதுமானது. ஜீசர் ஜார் உள்ள மிக்சியைRead More


பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’

துபாயில் நடந்து வரும் ‘ஜிடெக்ஸ்’ தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்றுள்ள சோபியா ‘ரோபோ’ பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மனித வடிவில், மனிதர்களின் செயல்பாடுகளைசெய்வது போன்று ‘ரோபோட் டிக்ஸ்’ தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ‘ரோபோ’ சோபியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ‘ரோபோ’வானது டேவிட் ஹான்சன் என்பவருக்கு சொந்த மானஹான் சன் ரோபோட்டிக்ஸ் என்ற ஹாங் காங் நாட்டுநிறுவனம் தயாரித் துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி உருவாக்கப்பட்ட சோபியா ‘ரோபோ’வுக்கு சவுதி அரேபியா அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. இந்த ‘ரோபோ’ சூழ்நிலைக்கு தகுந்தவாறு தானே பேசி, தானே முடிவு எடுக்கும் திறன்கொண்டது. இந்த ‘ரோபோ’ மனிதர்களை போலவே வாயசைவுடன் பேசும் திறன் வாய்ந்தது. அதாவது சோபியா ‘ரோபோ’வுடன் தொடர்ந்து 1 மணி நேரம் உரையாட முடியும். கேள்விகள்Read More


அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்

இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்த நிலையில் தற்போது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐந்து நாடுகளுடன் சேர்ந்து அந்நிய செலாவணி கொள்கைகள் கொண்ட நாடுகளின் கவனிப்பு பட்டியலில் இந்திய ரூபாயை கண்காணிப்பு பட்டியலில் இணைத்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டிரேஷரி டிபார்ட்மென்ட் உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. அதன்படி எந்த நாட்டு பணங்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோRead More


ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

`டிக் டிக் டிக்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்வேல் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொள்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. நவம்பர் கடைசி வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்டில் பணிபுரிந்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, சவுதி அரசு குறித்து விமர்சனம் செய்து பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தனது திருமணத்தை முன்னிட்டு சில ஆவணங்களை வாங்குவதற்காக துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு கடந்த 2ம் தேதி கசோகி சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் மாயமானார். இந்த சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரசிடம் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். கசோகி கொல்லப்பட்டதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கடந்த வாரம் துருக்கி அரசு தெரிவித்தது. அவர் கொல்லப்பட்டதாகவும் அது தெரிவித்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வந்த சவுதி அரசு, விசாரணையின் போது தவறுதலாக கசோகி கொல்லப்பட்டு இருக்கலாம் என்றுRead More


50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் -ஆதார் ஆணையம் மறுப்பு

மொபைல் இணைப்புகள் பெறும்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2016 செப்டம்பரில் சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ, சுமார் 25 கோடி இணைப்புகளை இவ்வாறு வழங்கியுள்ளது. பாரதி ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா, பிஎஸ்என்எல் போன்றவையும் இவ்வாறு இணைப்புகளை வழங்கியுள்ளன. ஆதார் இணைப்பின் மூலம் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகி விடுவதால், காகித ஆவணங்களை அழித்துவிடலாம் என கடந்த ஆண்டு மார்ச்சில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்கள், அதற்கு முன்னர் விவரங்களை நிரப்பி வழங்கிய, கேஒய்சி ஆவணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அழிக்கப்பட்டிருக்கக்கூடும். இந்நிலையில்தான், தனிநபர்களின் தனித்துவ அடையாளத்தை சான்று ஆவணங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது எனசுப்ரீம் கோர்ட் தடைRead More