Cinema

 
 

எதிர்ப்பை மீறி வாய்ப்புகள் – விஷால் படத்தில் சன்னி லியோன்

இந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள். அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் வீரமாதேவி படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடக்கிறது. வடிவுடையான் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். இந்த நிலையில் அடுத்து விஷாலின் அயோக்கியா படத்துக்கும் சன்னிலியோனை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தRead More


சர்கார் படத்திற்கு எதிராக விஜய் மீது கேரளாவில் வழக்கு

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த  சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சென்னை பாக்ஸ் ஆபிசில் இதுவரை ரூ11 கோடியை வசூல் செய்து உள்ளது. அமைச்சர்கள் எதிர்ப்பாலும், அ.தி.மு.க.வினர் போராட்டங்களாலும் சர்கார் பட  தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எதிர்ப்புகள் படத்துக்கு விளம்பரம் தேடி தந்துள்ளது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் சர்கார் மீதான பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை. இப்போது,  கேரளாவில் நடிகர் விஜய்க்கு எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சூரில் உள்ள மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கே.ஜே.ரீனா தயாரிப்பாளர், நடிகர் விஜய் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். விஜய் புகைபிடிப்பதை சித்தரித்துக் காட்டும் சுவரொட்டிகள் சிகரெட் மற்றும் இதரRead More


சர்கார் – வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் . கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சர்ச்சைக்குரியதாக கூறப்பட்ட நான்கு காட்சிகளை படக்குழு நீக்க ஒப்புக்கொண்டது. இதன்படி, அந்த நான்கு காட்சிகளும் நீக்கப்பட்டு தற்போது திரையரங்கில் சர்கார் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ‘சர்கார்’ படத்தின்Read More


‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது

அமைச்சர்கள் எதிர்ப்பாலும், அ.தி.மு.க.வினர் போராட்டங்களாலும் சர்கார் பட தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எதிர்ப்புகள் படத்துக்கு விளம்பரம் தேடி தந்துள்ளது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். உலகம் முழுவதும் சர்கார் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்ததாகவும், இந்திய அளவில் இந்த தொகை 3 நாட்களில் கிடைத்தது என்றும் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் பாகுபலி வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 3 நாட்களில் ரூ.65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ.2.37 கோடியும், 2–வது நாள் ரூ. 2.32 கோடியும் வசூலித்துள்ளது. தொடர்ந்து ரூ.2 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் துப்பாக்கி, கத்தி, பைரவா, தெறி, மெர்சல் ஆகிய படங்கள்Read More


முதலாம் உலகப்போர் நினைவஞ்சலி விழாவில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே

முதலாம் உலகப்போரின் நினைவஞ்சலி நிகழ்வில் இன்று பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பெல்ஜியத்தில், மரணித்த ராணுவவீரர்களின் உடல் அடக்கம்செய்யப்பட்ட இடத்தில் இன்று நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் முதலாம் உலகப்போரில் போராடிய முதல் மற்றும் கடைசி பிரித்தானிய வீரர்களின் கல்லறைகளில் பொப்பி மலர்வளையங்களை வைத்துஅவர் அஞ்சலி செலுத்தினார். 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப்போர் முடிவுக்குவந்த நாளில் கொல்லப்பட்ட முதல் பிரித்தானிய வீரரான ஜோன் பார் மற்றும் கடைசி வீரரான ஜோர்ஜ் எலிசன் ஆகியோரின் கல்லறைகளிலேயே பிரதமர் மலர்வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து பிரதமர் தெரேசா மே-யும் பெல்ஜிய பிரதமர் சார்லஸ் மைக்கேலும் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு பிரித்தானிய மற்றும் பெல்ஜிய ராணுவப் படைகளின் உறுப்பினர்களை சந்திப்பார்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பிரான்சின் சோமே பிராந்தியத்தில் அமைந்துள்ள அல்பேர்ட் நகருக்குRead More


ரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்

‘சர்கார்’ படம் வெளியாகும் முன்பே கதை திருட்டு, அரசியல் படம் என ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. இதனாலேயே இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் ‘தீபாவளியன்று வெளியாகும் ‘சர்கார்’ படத்தை எச்.டி. பிரிண்டில் அன்றைய தினமே வெளியிடுவோம்’ என தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவு கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெளிப்படையான சவால் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது. சவால் விட்டிருந்தபடி சர்கார் திரைப்படம் நேற்றுமுன்தினம் மாலை இணையதளத்தில் வெளியானது. இந்த தகவல் சமூக வலைதளத்தில் வேகவேகமாக பகிரப்பட்டது. இதனால் ஏராளமானோர் ‘சர்கார்’ திரைப்படத்தை திருட்டுத்தனமாக ‘டவுன்லோடு’ செய்து கொண்டனர். இந்த நிலையில்  தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட மேலும்  ‘டுவிட்டர்’ பதிவில் சர்கார் படத்தை வெளியிட்டது போல் ரஜினிகாந்தின்  2.0  படத்தையும் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்  விடுத்து உள்ளனர். சர்கார் படம் வெளியானRead More


சர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது. சர்கார் படம் உலகம் முழுவதும் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில்  வெளியாகி உள்ளது.  வெளியான அனைத்து தியேட்டர்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்று உள்ளது. பாகுபலி 2 (ரூ 214 கோடி), கபாலி (87.5 கோடி) மற்றும் பாகுபலி (73 கோடி) ஆகியவற்றை அடுத்து தென்னிந்திய திரைப்படங்களில் நான்காவது மிகப்பெரிய துவக்கத்தை இந்த படம் இப்போது பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 1 நாளில் சர்கார் 31.6 கோடி ரூபாயை வசூல் செய்து உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த படம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியானது. சென்னை திரையுலகில் பதிவு செய்யப்பட்ட பல தியேட்டர்களில் இந்த திரைப்படம் வெளியானது. இதில் 70 திரையரங்குகளில்  330 க்கும் மேற்பட்ட காட்சிகளில்  2.41 கோடிRead More


சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று ஒரு நாள் மட்டும் 22 திரையரங்குகளில் 330 காட்சிகள் திரையிடப்பட்டது. காலை முதல் இரவு வரையிலான காட்சிக்கு டிக்கெட்கள் அனைத்தும் நிரம்பி இருந்தன. முதல் நாள் மட்டும் 2 கோடியே 37 லட்ச ரூபாய் வசூலை எட்டிப் பிடித்து சர்கார் சாதனை படைத்துள்ளது. இது காலா ரூ.1.75 கோடி, பாகுபலி படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்

சினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். ஆனால் நடிகர்–நடிகைகளின் மகன்களோ, மகள்களோ எளிதாக வாய்ப்புகளை பெறுகிறார்கள். அவர்களுக்கு நடிப்பு திறமையை கூட பரிசோதிப்பது இல்லை. நான் இந்தி படங்களில் வாய்ப்பு தேடி அலைந்தபோது பலரும் என்னை நிராகரித்தனர். 30 படங்களுக்கு நடந்த நடிகை தேர்வுகளில் கலந்து கொண்டேன். அவற்றில் என்னை ஒதுக்கவே செய்தார்கள். அதன்பிறகு 2013–ம் ஆண்டு இஷாக் படத்தில் நடிக்க தேர்வானேன். முதல் படம் ஓடினால்தான் நிலைக்க முடியும். அது தோல்வி அடைந்தால் இரண்டாவது படம் கிடைப்பது கஷ்டம். சினிமா குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எல்லாரும் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் வெளியில் இருந்து வருபவர்களை கண்டுகொள்வது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படத்தை பார்த்த கமல், ரஜினி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். இருப்பினும் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு குறைத்தளவு தியேட்டர்களே கிடைத்தது. இருந்தாலும் இப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்து வந்ததால் சில நாட்களிலேயே பல தியேட்டர்களில் அதிக காட்சிகள் போடப்பட்டது. பல ஊர்களிலும் வெளியானது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவாவில் நடைபெறும் 49வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.Read More