canada

 
 

புகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்

கனடாவின் நோவா ஸ்கொட்ஷியா தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து, நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த தடையின் மூலம், சிறந்த எதிர்கால சந்ததியினை கட்டியெழுப்ப முடியுமெனவும், சுகாதாரமான சூழல், ஆரோக்கியமான வாழ்வு என ஏராளமான நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர, ஏனைய இடங்களில் சுருட்டு உள்ளிட்ட நெருப்பில் புகையும் பதார்த்தங்கள் மட்டுமின்றி, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள மின்சுருட்டுக்களையும் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் நகரில் புகைப்பதற்கு என்று மேலும் 30 இடங்களில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி மன்றம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக புகைக்கும் பழக்கத்தை உடையவர்களுக்கு என ஹலிஃபெக்ஸ் நகரில், குறிப்பாக பேரூந்து தரிப்பிடங்கள் உட்படRead More


சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்

பிரம்டன் நகர சபை ஆட்சிக்கான தேர்தலில் பற்றிக் பிரவுன் போட்டியிகிறார். நகர பிதா பதவிக்காக தேர்தலிலேயே அவர் களமிறங்குகிறார். பாலியல் புகார் காரணமாக ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய அவர் மீண்டும் தேர்தலில் களமிறங்கியுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பற்றிக் பிரவுன் தலைமை பொறுப்பில் இருந்த போது செய்யப்பட்டதாக கூறப்படும் செலவினங்கள் குறித்த ஆவணங்கள் தற்போது வெளியே கசிந்துள்ளது. சுமார் 300,000 டொலர்கள் வரை பணியாளர்கள் மற்றும் அலுவலக விவகாரங்களுக்காக அவர் செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 206,956 டொலர்கள் பணியாளர்களுக்காகவும், 53,271 டொலர்கள் அலுவலக விவகரங்களுக்காகவும், 16,426 டொலர்கள் தொடர்புகளுக்காகவும் பற்றிக் பிரவுன் செலவிட்டுள்ளார். பிரம்ரன் நகர சபை மேயராக போட்டியிடும் நிலையில், தேர்தலுக்கு முன்பாகவே இந்த ஆவணம் கசிந்துள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கனேடிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள தபால் ஊழியர்கள்

கனேடிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிடின், பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படும் என தபால் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனேடிய தபால் சேவைகளை மேம்படுத்தும் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற அந்நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள தவறுமிடத்து, அடுத்த நிமிடமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தபால் சங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. கனடாவின் தெரிவுசெய்யப்பட்ட நகரங்ளான விக்டோரியா, எட்மொன்டன், ஹலிஃபொக்ஸ், வின்ட்சன், ஒன்டாரியோ ஆகிய நான்கு இடத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தபால் சேவைக்கான தொழில் பாதுகாப்பு, மேலதிக நேர வேலையை வலியுறுத்துவதை ஒழித்தல், சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்ற அடிப்படைக் கோரிக்கைகளை தபால் அலுவலகர்கள் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


விமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஐஸ்லாண்ட்எயார் விமானம் (Icelandair) ஒன்றின் விமானி அறைக் கண்ணாடி யன்னல் உடைந்து சிதறியதை அடுத்து அந்த விமானம் கனடாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானியின் இடது பக்கத்திலிருந்த கண்ணாடி யன்னல் உடைந்ததாக அவர் அறிவித்ததைப் பயணி ஒருவர் Twitter பக்கத்தில் பதிவுசெய்தார். இந்த சம்பவத்தால் விமானத்திலிருந்த யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என விமான நிலையத்தின் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. தமது 688 இலக்க விமானம் திடீர் தொழினுட்ப பிரச்சினை காரணமாக க்யூபெக், பொகொட்வில்லே, விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யன்னலின் வெடிப்பு 20 சென்டிமீட்டர் நீளம் இருந்ததாக கூறப்படுகிறது. விமானம் தனது பயணத்தை ஆரம்பித்த போது 155 பயணிகளையும் 7 ஊழியர்களையும் ஏற்றிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சட்டவிரோத கஞ்சா விற்பனை – 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு!

சட்டவிரோதமான முறையில் கஞ்சா விற்பனை செய்த 5 மருந்தகங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போதே இவை முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல மாகாணங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. இந்நிலையில், அண்மையில் கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க, கடந்த (புதன்கிழமை) நாடு முழுவதும் கஞ்சா போதைப் பொருள் அரசாங்கத்தின் அனுமதியுடன் கொள்வனவு, விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் சில பகுதிகளில் சட்டவிரோத விற்பனை இடம்பெற்றதாகவும், இதன் போது 8 நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு

ஹமில்டன் நகரில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கிங் மற்றும் வெலிங்டன் தெருக்களில் உள்ள குடியிருப்பு பகுதியினுள் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு கத்தியுடன் நபர் இருப்பதாக பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைப்பு கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர். இதன் போது காயமடைந்த பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த பெண் தொடர்பில் தகவல் வெளியிடாத சிறப்பு புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு

கென்னடி சுரங்க ஸ்டேஷன் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 24 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுரங்க நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மூன்று ஆண்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து குறித்த பகுதிக்கு அங்கு சென்ற பொலிஸார் இரு நபர்களுக்கிடையிலேயே மோதல் இடம்பெற்றதை உறுதி செய்தனர். மேலும் இந்த மோதலில் ஒருவர் காயமடைந்ததாகவும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் வாகன தரிப்பிடத்தில் வைத்து கொலைச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி

பிரம்ப்டன் பகுதியில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதாக ட்ரக் ரக வாகன சாரதி மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குயின் எலிசபெத் வே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்திலேயே அவர் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பர்லிங்டனில் உள்ள குயின் எலிசபெத் வே – இல் பகுதியில் காலை 7.30 மணியளவில் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் செலுத்துவதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த அதிகாரி ஒருவர் குறித்த வாகனம் நெடுஞ்சாலையில் இருந்த கொன்கிரீட் சுவரில் இடித்துக்கொண்டு மரத்தில் மோதியதை கண்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி கூறினார். இந்நிலையில் அவரை கைது செய்த பர்லிங்டன் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் அவர் மதுபோதையில் இருந்தாரா என சோதனை செய்தனர். இருப்பினும் அவர் மதுபானத்தால் பாதிக்கப்படவில்லை எனவும், ஆனால் அவரது நடத்தை “அசாதாரணமானது” என்பதால்Read More


சாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

சாஸ்கடூன் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 42 வயதுடைய பெண்ணான கீம் கெம்பல் என மருத்துவ பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 21ஆவது தென் வீதி மற்றும் வடக்கு அவனியூவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற தீவிபத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சடலம், கட்டடத்தின் அடித்தளத்திலிருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த தீ விபத்தினால் ஒரு இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் தீக்கிரையாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்தேகத்திற்கிடமான தீ மற்றும் இறப்பு இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இரங்கல் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ரயில் விபத்தில் தங்களது சொந்தங்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு காயமடைந்தவர்கள் மீண்டுவரவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஆன்டானியோ குட்ரெசும், இந்த விபத்திற்கு இரங்கல் வெளியிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், இன்று (சனிக்கிழமை) தசர விழா கொண்டாட்டத்தின் போது நேரிட்ட ரயில் விபத்தில், 61 பேர் உயிரிழந்தனர். அத்தோடு படுகாயமடைந்த நிலையில் 71 பேர், வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.