சிரிய அவலமும் தமிழ் மக்களும்

indranசிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் கொள்ளப்படுவதும் குறிப்பாக குழந்தைகள் கொல்லப்பட்ட காணொலிகளும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்கள் எங்கும் நிரம்பி வழிந்திருக்கின்றன. இது பற்றி அதிகம் தேடியவர்கள் கவலைப்பட்டவர்கள் பகிர்ந்தவர்கள் பட்டியலில் தமிழ் மக்கள் முக்கியமானவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு தமிழ் மக்கள் செயல்ப்படுவதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன.

சிரிய அவலங்கள் தமிழ் மக்கள் 2009 இல் எதிர்கொண்ட இனப்படுகொலையை நினைவுபடுத்துபவை,

தமிழ் மக்களிடம் இயல்பாகவே இருக்கும் உயிர்நேய மனோபாவம், இலகுவில் உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மை போன்றவற்றை முக்கியமான காரணங்களாக குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மேற்சொன்ன விடயங்களிற்குள் அடங்காமல் எதையும் பகுத்து அறிந்து ஆராய்ந்து நிதானமாக நடக்கும் நபராக தன்னை அறிமுகப்படுத்தும் தமிழர் ஒருவர் ‘முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது கூட இவ்வளவு பெருந்தொகையான பிணக்குவியல்களை நான் படங்களில் பார்த்ததில்லை’ என்றார்.

பதிலுக்கு, இல்லை இதைவிடப்பெருந்தொகையான மக்களும் குழந்தைகளும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். அங்கு கொத்தணிக்குண்டுகளும் இரசாயணக்குண்டுகளும் பாவிக்கப்பட்டன என்றார் இன்னொருவர். அந்தநபரோ ஆதாரத்தைக் காட்டுங்கள் என்றார். உடனடியாக ஆதாரத்தைக் காட்டுவதற்கு கூகிளோ யுடியூப்போ உதவவில்லை. அடுத்ததாக வகை தொகையற்ற சாட்சியங்களைக்கொண்ட ஓரிரு இணையத்தளங்களிற்கு செல்லமுற்பட்டபோது அவை எவையும் செயற்பாட்டில் இல்லை. இது பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது.

ekuruvi_night-2018முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு சாட்சிகளற்ற யுத்தமாக நடத்திமுடிக்கப்பட்டது மட்டுமன்றி எஞ்சியிருக்கின்ற சாட்சியங்களும் தேடுபொறிகளிலும் வலைத்தளங்களிலும் இருந்து மிகவும் திட்டமிட்டு நாளுக்குநாள் அழித்தொழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்களில் ஒரு சாரார் துயரங்களில் அழுதுவிட்டுப்போவதிலும் இன்னொரு சாரார் எதிலும் எப்போதும் கேள்விகளை மட்டுமே கேட்டுவிட்டுப்போவதிலுமே காலத்தை கடத்திக்கொண்டிருக்க அவர்களது ஆவணங்கள் அல்லது அவர்களது நிரந்தர விடுதலைக்கு பாவிக்கக்கூடிய ஆயுதங்கள் அவர்களுக்குத்தெரியாமலே களவாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்கள் தங்களிடத்தில் இயல்பாகவே இருக்கும் இரக்ககுணம், உணர்ச்சிவசப்படுதல் போன்ற தங்களது அடிப்படைக்குணாதிசயங்களில் இருந்து மாறாமல் அவர்களைச்சுற்றி நிகழ்ந்துவரும் பேராபத்துக்களில் இருந்து தங்களை பாதுகாத்து நிலைப்படுத்திக்கொள்வது எப்படி என்பது பற்றி சிந்தனை செய்யவைக்க இக்கட்டுரை விரும்புகிறது.

அதனை சிரிய அவலம் என்கின்ற உதாரணத்தின் உட்கூறுகளை சுருக்கமாக விவரிப்பதன்ஊடக விளங்கப்படுத்த முடியும்.

இஸ்லாமிய நாடான சிரியாவின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 18.5 மில்லியன்கள். இதில் 74 சதவிகிதம் பேர் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பதின்மூன்று சதவிகிதம் பேர் சியா மற்றும் அதன் உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். பத்து சதவிகிதம் பேர் கிறித்துவர்கள் மற்றும் சிரியாவின் ஆதி இனத்தவர்கள். மூன்று சதவிகிதத்தினர் ட்ரூஸ் இனத்தவர்கள்.

இதில் சிரியா உட்பட்ட இஸ்லாம் தேசங்கள் பலவற்றில் சியா பிரிவினரிற்கும் சன்னி பிரிவினரிற்கும் இடையே இருக்கும் பகையும் மோதலும் என்பது பல தசாப்தங்களாக நீடித்து நிலைத்திருப்பது.

1971 ஆம் ஆண்டு சிரியாவின் சுதந்திரத்தின் பின்னர் சிறுபான்மையினரான சியாபிரிவினரின் உட்பிரிவில் ஒன்றான அலாவிட் பிரிவைச்சேர்ந்த (யடயறவைந) கபீஸ் அல் அசாத் (ர்யகநண யட-யுளளயன) அதிபராகிறார். எதிர்க்கட்சி வரிசையில் பெரும்பான்மையினத்தவர்களான சன்னி பிரிவினர் இருக்கிறார்கள்.

இந்நிலையில் 1990 ஆம் ஆண்டு ‘எதிர்க்கட்சிகளுக்கான சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது’ என்ற அசாத்தின் அறிவிப்பைத்தொடர்ந்து பெரும்பான்மையான சன்னிக்களை சிறுபான்மையினரான சியாக்கள் எப்படி ஆளமுடியும் என்ற கோசங்கள் வலுப்பெறத்தொடங்கின.

இருந்தாலும் அரச அதிகாரத்தை தம்வசம் வைத்திருக்கும் சியாக்களே தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்திருக்கிறார்கள். இந்நிலையில் கபெஸ் அல் அசாத்தின் மகனான பசல் அல் அசாத் 2000 ஆம் ஆண்டுகளில் பதிவிக்கு வருகிறார்.

அதன்; பின்னரும் பசலும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்துசெய்யும் ஆட்சியை அகற்றக்கோரும் பெரும்பான்மை இனத்தவர்களான சன்னிக்களை உள்ளடக்கியோரின் போராட்டம் தொடர்ந்துகொண்டேயிருந்தது. ஆனாலும் அவை ஒரு வரையறைக்குற்பட்ட அளவிலேயே இருந்தன.

ஒரு கட்டத்தில் பசல் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றக்கோரும் கோரிக்கையும் பலமும் அதிகரிக்கத்தொடங்கியது. குடியுரிமை மறுக்கப்பட்ட குர்திஸ் மக்கள். பசல் அல் அசாத்தின் ராணுவத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் உருவாக்கிய ‘சுதந்திர சிரியன் ராணுவம் (FSA – Free Syrian Army) உட்பட்ட சிரியா அரசுக்கு எதிரான இயக்கங்கள் பல ஒன்று சேர்க்கப்பட்டு துருக்கியில் வைத்து ‘சிரியன் தேசிய கவுன்சில்’ உருவாக்கப்படுகிறது.

இவர்களுக்கான அத்தனை ஆயுத பண உதவிகளையும் அமெரிக்கா, சவுதி, இஸ்ரேல், துருக்கி போன்ற நாடுகள் வழங்கின. அதுவரைக்கும் ஒரு வரையரைக்குள் இருந்த சிரிய அரசுக்கும் அதனை எதிர்ப்போருக்குமான போராட்டம் என்பது ஒரு பிரமாண்டமான ஆயுதப்போராக பரிணாமம் எடுக்க வைத்த பெருமை அமெரிக்கா, சவூதி அரேபியா, இஸ்ரேல், துருக்கி போன்ற நாடுகளையே சாரும். அரசுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் ஒன்றிணைக்கவும் ஆயுதாரிகளாக பலப்படுத்தவும் வேண்டிய முடிவுக்கு மேற்சொன்ன நாடுகள் வரக்காரணம் தத்தமது அரசியல் பொருளாதார நலன்களேயன்றி சிரியர்களின் நலன்களின்பாட்பட்டதல்ல.

அதிகளவு எண்ணைக்கிணறுகளைக் கொண்டிருக்கும் சிரியாவானது பிராந்திரயத்தில் முக்கியத்துவம் மிக்க நாடக இருப்பதுடன் அதன் தற்போதைய அதிபர் ஈராக் போர்க்காலம் உட்பட எப்போதும் அமெரிக்க எதிர்ப்பாளராக இருப்பதனால் அதனை உடைத்து தம்மை நோக்கி வளையக்கூடியவர்களை உருவாக்குவதன் ஊடாக பெறக்கூடிய அரசியல் பொருளாதார நலனை முன்னிறுத்தும் அமெரிக்கா.

நிலத்தடியில் குழாய்கள் வழியாகக் ஐரோப்பாவிற்கு எண்ணைய் கொண்டு செல்லும் சவுதி அரேபியாவின் திட்டத்தை எதிர்க்கும் சிரிய அதிபர் அசாத்தின் ஆட்சியை அகற்றவேண்டிய சவுதி அரேபியாவின் தேவை.

சிரியாவில் புலம்பெயர்ந்துவாழும் பலஸ்தீனியர்களிடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தலை அகற்றவேண்டிய ஸ்ரேலின் தேவை

பருத்தி ஆடை உற்பத்தியில் சிரியா சிறந்து விளங்குவதால் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் துருக்கி என அசாத்தின் ஆட்சியை அகற்றத்துடிப்போரின் கூட்டணி ஒரு புறம்.

மறுபுறம் தங்களில் யார் பிராந்திய பலசாலிகள் என்ற போட்டியில் சவுதிக்கு எதிர்த்திசையில் இருக்கும் ஈரான். தங்களில் யார் சர்வதேச பலசாலிகள் என்ற போட்டியில் அமெரிக்காவுக்கு எதிர்த்திசையில் இருக்கும் ரஸ்யா அமெரிக்காவுக்கு வில்லத்தனம் காட்டும் வடகொரியா போன்ற நாடுகள் அசாத்துக்கும் சிரிய அரசுக்கும் ஆதரவு கொடுக்கின்றன.

சியாக்களுக்கும் சுனிக்களுக்கும் இயல்பாகவே இருக்கும் பகையை வைத்துக்கொண்டு சிரியா என்ற ஒற்றைத்தேசத்தில் உலகின் பலம் பொருந்திய சக்திகள் பல இரண்டாக பிரிந்து ஒரு உலக மகாயுத்த ஒத்திகை பார்ப்பதன் விளைவே நாம் பார்க்கும் சிரிய அவலம்.

உலகெங்கும் ஊடகங்களை ஆக்கிரமிக்கச்செய்த படுகொலைப்புகைப்படங்கள் காணொளிகளில் அனேகமானவை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஆதரவு வழங்கும் கிளர்ச்சியாளர் தரப்பினர் மீது சிரிய அரசுப்படைகளும் அவர்களுக்கு ஆதரவு வழங்கியவர்களும் மேற்கொண்ட தாக்குதல்களால் ஏற்படுத்தப்பட்டவை எனப்படுகிறது. அதில் வடகொரியாவும் ஈரானும் இரசாயண ஆயுதங்களை சிரிய ஆட்சியாளர்களுக்கு வழங்கி இத்தாக்குதலை நடத்த ஊக்குவித்திருப்பதாக செய்திநிலவிவருவதும் கூடுதல் தகவல்.

ஆகமொத்தத்தில் அமெரிக்க ஊடகங்களில் ஆரம்பித்து உலகெங்கிலும் உள்ள ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் நிரம்பி வழிந்த செய்திகளின் சாராம்சம் சிரியாவில் நிகழும் மனிதப்பேரவலம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இப்பேரவலத்திற்கு காரணமான சிரிய அரசும் அதற்கு ஆதரவளிக்கும் ரஸ்யா ஈரான் வடகொரியா போன்றனவும் தடைசெய்யப்பட்ட குண்டுகளை பாவித்தே இக்கொலைகளைப் புரிகின்றன என்பதுவேயாகும். இதை இன்னொருவகையில் சிரிய அவலத்தை முன்நிறுத்தி தன் எதிரிகளை அம்பலமாக்கும் அமெரிக்கப்பிரச்சாரம் என்கிறார்கள். சிரிய அரசையும் அவர்கள் சார்ந்தவர்களையும் வேட்டையாடத்தேவையான ஆதரவுத்தளத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு தன் கட்டுப்பாட்டில் உள்ள வலைத்தளங்களையும் செய்தி நிறுவனங்கள் மற்றும் அரசுகளையும் பயன்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். இதில் சிரிய நலனிலும் பார்க்க அமெரிக்காவினதும் அதன் கூட்டுச்சக்திகளினதும் நலன்தான் துலக்கமாக தெரிகிறது என்கிறார்கள்.

மேற்சொல்லப்படுவது உண்மையெனில், சிரியப்படுகொலைகளை நிறுத்தச்சொல்லியும் அதற்காக அனுதாபமும் வருத்தமும் பட்டவர்களில் முக்கியமானவர்களாக தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது உணர்வுரீதியாக அவர்கள் அனுபவித்த வலியினதும் அவர்களிடம் இருக்கும் மனிதாபிமானப்பண்பினதும் வெளிப்பாடாக இருந்தாலும் அறிவுரீதியாக அவர்கள் அமெரிக்காவினதும் அதன் கூட்டுச்சக்திகளினதும் நலன்களை முன்னெடுத்துச்செல்வதில் பங்கெடுத்த பிரச்சாரப்பீரங்கிகளாகவே பயன்பட்டிருக்கிறார்கள் அல்லது பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் மிகையில்லை.

இவ்விடயத்தில் தமிழ்மக்கள் தங்கள் உணர்வையும் அறிவையும் ஒருசேர பயன்படுத்தியிருந்தால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களிற்கு நீதிவழங்காததன் தொடர்ச்சியே சிரியாவில் இன்று நடைபெறும் படுகொலைகள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக தங்கள் சுலோகங்களை முன்வைத்திருக்கவேண்டும்.

முள்ளிவாய்க்காலிலும் அரசொன்று சர்வதேச நாடுகளின் உதவியுடன் தன்நாட்டு மக்களை தடைசெய்யப்பட்ட ஆயுதங்களான கொத்துக்குண்டுகளையும் இரசாயனக்குண்டுகளையும் கொண்டு படுகொலை செய்தார்கள் என்பதை ஒப்பீடு செய்திருக்கவேண்டும். தாங்கள் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு செய்தியிலும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் படத்தையும் சிரிய அவலத்தின் படத்தையும் இணைத்தே பகிர்ந்திருக்கவேண்டும்.

அவ்வாறு நிகழ்த்தியிருந்தால் சிரிய அவலத்திற்காக அழும் பல்லாயிரம்பேரை தமிழ் மக்களுக்காகவும் அழவைத்திருக்கமுடியும். சிரிய அவலத்தை பெரிதென விழிப்போரிடம் தமிழ்மக்களின் அவலம் எத்தகைய பெரிதென புரிய வைத்திருக்கமுடியும். தேடிஅழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன அழிப்பின் சாட்சியங்களை தேடும் இடம் எங்கும் கிடைக்கும்படி செய்திருக்கமுடியும்.

இணையத்தளங்களையும் சமூகவலைத்தளங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தமக்குத்தேவையானவற்றைப் பரப்புவதையும் தேவையற்றவற்றை நீக்குவதையும் செய்ய சில அரசுகளிடம் அதிகாரம் இருக்கிறதென்றால் தமக்குத்தேவையானவற்றை யாராலும் நீக்கமுடியாதபடி பரப்பவும் பாதுகாக்கவும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் அறிவுக்கு தெரிந்திருக்கவேண்டும். அது தான் சிரியா மட்டுமல்ல உலகில் இனியெங்கிலும் நடக்கவிருக்கும் மனிதப்பேரவலங்களில் இருந்து மானிடத்தைக்காக்கஉதவும்.

முள்ளிவாய்க்காலைவிட்டுவிட்டு றொகிங்கியாவுக்கும் றொகிங்கியாவை விட்டுவிட்டு சிரியாவுக்கும் அழுதல் என்பது நாளை சிரியாவை விட்டுவிட்டு இன்னுமொரு தேசத்திற்கோ மக்கள்கூட்டத்திற்கோ அழுவதற்கே இம்மக்களை மற்றவர்கள் பயன்படுத்துவார்கள்.


மார்ச் 2018 இன் இகுருவி பத்திரிகையில் இந்திரன்அவர்களால் எழுதப்பட்டது

 


Related News

 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • ஜஸ்ரின் ரூடோ தடுமாறுகின்றாரா? ரதன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *