ஒடிசாவில் பன்றிக் காய்ச்சலுக்கு 14 பேர் பலி

swine-flu-1-600__1_ஒடிசா மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 22 மாவட்டங்களை H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்று தாக்கியுள்ளது. நேற்று மேலும் 12 பேருக்கு இந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 216 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, பன்றிக் காய்ச்சல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் நேற்று உயிரிழந்ததையடுத்து இந்நோயின் தாக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஒடிசாவை தாக்கிய பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 13 பேர் பலியாகினர். ஆனால், இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்குள் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பன்றிக்காய்ச்சல் நோயை சமாளிப்பதற்கு தேவைப்படும் மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மக்களை பீதி அடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேவேளையில், அசம்பாவிதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கான மருந்துகளை கூடுதலாக அனுப்பி வைக்குமாறு மத்திய அரசை ஒடிசா மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

Share This Post

Post Comment