சுவிட்சர்லாந்தில் நெடுஞ்சாலையில் தானாக ஓடிய கார்

ekuruvi-aiya8-X3

carசுவிட்சர்லாந்தில் நபர் ஓருவர் நெடுஞ்சாலையில் தானாக ஓடிய காரை துரத்தி சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 17ம் திகதி A5 நெடுஞ்சாலையிலே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், சாலை பராமரிப்பு தொழிலாளர்கள் நெடுஞ்சாலையில் ஏற்பட்டிருந்த சேதத்தை பார்த்து புகார் அளித்துள்ளனர்.

புகாரை தொடர்ந்து பொலிசார் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்துள்ளனர்.

அதில், சேதத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது. குறித்த வீடியோவை Neuchâtel மாகாண பொலிசார் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

குறித்த வீடியோவில், சாலை ஓரத்தில் லொறி ஓட்டுநருடன் கார் ஓட்டுநர் பேசிக்கொண்டிருக்கிறார்.

அப்போது, கார் திடீரென தானாக நெடுஞ்சாலையில் ஓடுகிறது. இதைக்கண்ட ஓட்டுநர் சாலையில் வாகனங்கள் வருவதை பார்க்காமல் காரை துரத்தி சொல்கிறார்.

நெடுஞ்சாலை சுவர்களில் இடித்து சேதம் விளைவிக்கும் கார் இறுதியில் பெயர் பலகையில் மோதி நிற்கிறது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் லொறி ஓட்டுநரையும், கார் ஓட்டுநரையும் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த குற்றத்திற்க்காக இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment