சுவீடன் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

Thermo-Care-Heating

Sl_police1சுவீடன் நாட்டின் வௌிவிவகார அமைச்சர் மாகஸ்ட் வொல்ஸ்டோம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின் ​போது அவர், இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

இந்த சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை வௌிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் மாகஸ்ட் வொல்ஸ்டோம் லக்‌ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில், “வௌிநாட்டு கொள்கைகளில் பெண்களின் பொறுப்பு” என்ற தலைப்பிலான உரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment