கடல் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தில் இணைந்தது இலங்கை

seaஐக்கிய நாடுகள் சபையின் கடல் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தில் இலங்கையும் இணைந்துள்ளதாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடலில் ப்ளாஸ்டிக் கழிவுகளை சேர்க்காதிருக்கும் உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதில் இலங்கை, சிலி, ஓமான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் நேற்று அங்கத்துவம் பெற்றுள்ளன.

இதன்போது கடலில் ப்ளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கூளங்களை சேர்க்காதிருக்கவும், அதிகப்படியான மீள்சுழற்சி வேலைத்திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தவும் இலங்கை உறுதி எடுத்துள்ளது.

Share This Post

Post Comment