சிறீலங்காவின் 69ஆவது சுதந்திரநாள் இன்று, வடக்கில் துக்கநாளாக அனுட்டிப்பு!

ekuruvi-aiya8-X3

sri-lanka-independance-day-2இன்று சிறீலங்காவின் 69ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இன்றைய நாள் வடக்கில் துக்க நாளாக கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் நாள் சிறீலங்கா சுதந்திரமடைந்ததை நினைவுகூரும் வகையில் இன்று காலை 8.30 மணியளவில் காலி முகத்திடலில், சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறீலங்காவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு இராணுவ அணிவகுப்பு மரியாதை இடம்பெறவுள்ளது.

இம்முறை சுதந்திர தினத்தில் சிறீலங்கா இராணுவத்தின் ஆயுத பலத்தை உலகுக்குக் காண்பிப்பதற்காக ஆயிரக்கணக்கான படையினர் மற்றும் போர்த்தளபாடங்களைக் காட்சிப்படுத்தும் இராணுவ அணிவகுப்பு முக்கிய அம்சமாக நடைபெறவுள்ளது.

சிறீலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்து 69ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில் தமிழ் மக்களுக்கு 69 ஆண்டுகளாக சுதந்திரம் மறுக்கப்பட்டு வரும் நிலையே தொடர்கின்றது.

இதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாகவும், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும் இன்று யாழ்ப்பாணம் நிறைவேற்றத் தவறியதைக் கண்டித்தும், இன்றைய நாளை துக்கநாளாக கடைப்பிடிக்க வடக்கில் பலவேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இன்று யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக, கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் கேப்பாபிலவு பகுதியில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி, விமானப்படைத்தளம் முன்பாக கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களும் இன்றைய நாளை கறுப்பு நாளாக கடைப்பிடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பிலும் தமது காணிகளை பறிகொடுத்த மக்களும் இன்றைய நாளை துக்கநாளாக கடைப்பிடிக்கப் போவதாக கூறியுள்ளனர்.

அதேவேளை, இன்றைய நாளை கறுப்புநாளாக கடைப்பிடிக்க மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும், இந்த அமைப்பின் சார்பில் கறுப்புநாளை கடைப்பிடிக்க மன்னார் மாவட்ட நீதிவான் மூலம், காவல்துறையினர் தடை உத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளனர்.

Share This Post

Post Comment